உங்கள் உணவில் உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்தும் இருக்கலாம். ஆனால் தவறான கலவையில் சாப்பிட்டால் இந்த ஊட்டச்சத்துக்களை உங்களால் உறிஞ்ச முடியாமல் போகலாம்.
நீங்கள் செரிமான பிரச்சனைகள் அல்லது தோல் ஒவ்வாமைகளால் பாதிக்கப்படுகிறீர்களா? நீங்கள் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் உணவில் உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்தும் இருக்கலாம். ஆனால் தவறான கலவையில் சாப்பிட்டால் இந்த ஊட்டச்சத்துக்களை உங்களால் உறிஞ்ச முடியாமல் போகலாம். இந்த உணவுகள் உடல் ஆரோக்கியத்தில் தீங்கை ஏற்படுத்தும். எனவே ஆயுர்வேதத்தின் படி நீங்கள் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1. பழம் மற்றும் பால்: ஆயுர்வேதம் பழம் மற்றும் பால் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க பரிந்துரைக்கிறது, ஏனெனில் இது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இந்த கலவையானது சில நபர்களுக்கு வீக்கம் மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும்.
இந்த 7 காய்கறிகளை கழுவாமல் சாப்பிடக்கூடாதாம்.. ஏன் தெரியுமா..?
2. பலாக் மற்றும் பனீர்:
பாலக் (கீரை) மற்றும் பனீர் (இந்திய சீஸ்) இரண்டும் சத்தான உணவுகள் என்றாலும், அவற்றை சேர்த்து சாப்பிடுவது சிறந்ததாக இருக்காது. பனீரில் உள்ள கால்சியம், கீரையில் இருந்து இரும்பை உறிஞ்சுவதில் சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே இது, உணவின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து நன்மைகளைக் குறைக்கிறது.
3. தேன் மற்றும் வெந்நீர்:
தேனைச் சூடாக்குவது அதன் நன்மை செய்யும் என்சைம்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களை அழித்து, அது ஊட்டச்சத்துகளை குறைக்கும். மேலும் ஆயுர்வேதத்தின்படி, மிகவும் சூடான நீரில் தேன் கலந்து குடிப்பது தீங்கு விளைவிக்கும் கலவைகளை உருவாக்கலாம். தேனை அதன் ஆரோக்கிய நன்மைகளைப் பாதுகாக்க, வெதுவெதுப்பான அல்லது அறை வெப்பநிலை நீரில் தேனை உட்கொள்வது பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது.
4. பேரீச்சம்பழம் மற்றும் பால்:
பால் மற்றும் பேரீச்சம்பழம் போன்ற இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளுடன் கால்சியம் நிறைந்த உணவுகளை சேர்த்து , கால்சியம் இரும்புச் சத்தை உறிஞ்சுவதைத் தடுக்கும். பாலில் உள்ள கால்சியம், பேரீச்சம்பழத்தில் இருந்து இரும்பை உறிஞ்சும் உடலின் திறனில் சிக்கலை ஏற்படுத்தும். இது உணவில் இருந்து ஒட்டுமொத்த இரும்பு உறிஞ்சுதலைக் குறைக்கும். குறிப்பாக, இரத்த சோகை இருந்தால், இந்த கலவை இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கும். எப்போதாவது பாலுடன் பேரீச்சம் பழம் சேர்ஹ்து சாப்பிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் அதை பழக்கமாக்கினால் சிக்கல் ஏற்படும்..
Weight Loss : வெயிட் லாஸ் பண்ண ட்ரை பண்றீங்களா? அப்ப இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க..
5. ஐஸ்கிரீம் மற்றும் குலாப் ஜாமூன்: சூடான மற்றும் குளிர்ந்த உணவுகளை ஒன்றாக சாப்பிடக்கூடாது. நீங்கள் சூடான உணவை உட்கொள்ளும்போது, உங்கள் உடல் செரிமானத்திற்கு உதவுவதற்கும் வெப்பத்தை வெளியேற்றுவதற்கும் வயிற்றுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மாறாக, குளிர்ந்த உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கும் மற்றும் வயிற்றில் உள்ள இரத்த நாளங்களின் சுருக்கத்தை ஏற்படுத்தும். இந்த கலவை வீக்கம், வாயு அல்லது அசௌகரியத்திற்கு வழிவகுக்கும்.
6. உணவுடன் தேநீர்:
டீயில் டானின் மற்றும் காஃபின் போன்ற ஆன்டி நியூட்ரியண்ட்கள் உள்ளன. இது உடலில் இரும்பு மற்றும் கால்சியம் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. எனவே, காலை உணவு அல்லது சிற்றுண்டியுடன் தேநீர் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
7. பால் மற்றும் மீன்:
ஆயுர்வேதத்தின்படி, பால் மற்றும் மீன் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடக்கூடாது. இந்த கலவையானது செரிமானத்தை கடினமாக்கும். மேலும் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை உருவாக்குகிறது.