ஒருமுறை பருப்பு குழம்பு 'இந்த' ஸ்டைலில் செஞ்சு பாருங்க.. கண்டிப்பா பிடிக்கும்..  ரெசிபி இதோ..!

Published : Jul 01, 2024, 02:52 PM ISTUpdated : Jul 01, 2024, 03:01 PM IST
ஒருமுறை பருப்பு குழம்பு 'இந்த' ஸ்டைலில் செஞ்சு பாருங்க.. கண்டிப்பா பிடிக்கும்..  ரெசிபி இதோ..!

சுருக்கம்

Paruppu Kulambu Kerala Style  : இந்த பதிவில், கேரளா ஸ்டைலிஷ் பருப்பு குழம்பு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இன்று மதியம் என்ன சமைப்பது என்று தெரியவில்லையா..? அப்படி என்ன சமைப்பது என்று நீங்கள் யோசித்துக் கொண்டே இருந்தால், பருப்பு குழம்பு செய்யுங்கள். அதுவும் நீங்கள் எப்போதும் செய்வது போல் அல்லாமல், ஒருமுறை, கேரளா ஸ்டைலில் பருப்பு குழம்பு செய்யுங்கள்.  இந்த பருப்பு குழம்பு சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு மிகவும்  எளிதாகவும் இருக்கும். முக்கியமாக உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் சரி வாங்க.. இப்போது இந்த பதிவில், கேரளா ஸ்டைலிஷ் பருப்பு குழம்பு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  Soya 65 : 10 நிமிடத்தில் சிக்கன் 65 சுவையில் சோயா 65.. ஒருமுறை செய்ங்க.. அடிக்கடி செய்வீங்க!

கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 5
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1/4 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க: ருசியான பீட்ரூட் புலாவ்.. சுலபமாக செய்யலாம் வாங்க.. ரெசிபி இதோ!

செய்முறை:
கேரளா ஸ்டைலில் பருப்பு குழம்பு செய்ய முதலில், ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் எடுத்து வைத்த பாசிப்பருப்பை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு அதை குக்கரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து 3 விசில் விட்டு இறக்கவும். விசில் போனதும் குக்கரின் மூடியை திறந்து பருப்பை நன்கு மசிக்கவும். இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து அதே கடையை அடுப்பில் வைத்து அதில் அவித்து மசித்து வைத்த பருப்பை ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க விடுங்கள். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள். இதில் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு அதை அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள். அடுத்து மற்றொரு கடைய அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பிறகு வெட்டி வைத்த வெங்காயத்தையும் இதனுடன் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இதனை அப்படியே பருப்பில் ஊற்றி விடுங்கள். இதனுடன் சிறிதளவு நெய்யும் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் ருசியான கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு தயார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

Ultra-Processed Foods: இதயத்தை மெல்ல கொல்லும் பாக்கெட் உணவுகள்! அதிரவைக்கும் மருத்துவ அறிக்கை! முழு விவரம்!
குழந்தைகளின் மூளை வளர்ச்சியைத் தூண்டும் 8 ஒமேகா-3 நிறைந்த சைவ உணவுகள்