Cauliflower Gravy Recipe ; இந்த பதிவில் அட்டகாசமான சுவையில் காலிஃப்ளவர் கிரேவி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இன்னைக்கு காலையில உங்க வீட்ல சப்பாத்தி செய்தால், காலிஃப்ளவரில் ஒரு முறை கிரேவி செய்து சாப்பிடுங்கள். சுவை அட்டகாசமாக இருக்கும். இந்த கிரேவியை நீங்கள் சப்பாத்தி மட்டுமின்றி பூரி, தோசை, இட்லி, நான் ஆகியவற்றுடனும் சாப்பிட்டாலாம். ஒருமுறை காலிஃப்ளவரில் இது கிரேவி செய்து கொடுங்கள், உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க... இப்போது இந்த பதிவில் காலிஃப்ளவர் கிரேவி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: 1 கப் ரவை இருக்கா..? காலை டிபனுக்கு குழந்தைகளுக்கு பிடிச்ச பன் தோசை செஞ்சி கொடுங்க..
காலிஃப்ளவர் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் கழுவுவதற்கு...
காலி ஃபிளவர் - 300 கிராம்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
வெந்நீர் - தேவையான அளவு
மசாலா அரைப்பதற்கு...
முந்திரி - 5
மல்லி விதை - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
எள்ளு - 1 ஸ்பூன்
பட்டை - 1 சின்னது
வதக்க..
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1 ( பொடியாக நறுக்கியது)
பூண்டு - 5
இஞ்சி - சின்னது
தக்காளி - 2
எண்ணெய் - தேவையான அளவு
கிரேவி செய்ய...
சீரகம் - 3 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
தயிர் - 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
இதையும் படிங்க: உங்க வீட்ல கொண்டக்கடலை இருக்கா?! உடனே இப்படி தோசை செய்ங்க.. எக்கச்சக்க சத்துக்கள் இருக்கு!
செய்முறை:
காலிபிளவர் கிரேவி செய்ய முதலில் எடுத்து வைத்த காலிஃப்ளவரை ஒரு பாத்திரத்தில் வைத்து, அதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் காலிஃப்ளவர் மூழ்கும் அளவிற்கு வெந்நீரை ஊற்றி ஒரு தட்டை கொண்டு மூடி ஐந்து நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எடுத்து வைத்த முந்திரி, மல்லி விதை, மிளகு, சீரகம், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, எள்ளு, பட்டை ஆகியவற்றை செய்யறது நன்கு வதக்கி, பிறகு அதை ஆற வையுங்கள். பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இதனை அடுத்து அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் .பிறகு இதனுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு தக்காளியின் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி கொள்ளுங்கள். பிறகு அதை ஆற வைக்கவும். பின் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். மீண்டும் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் காலிஃப்ளவரை சேர்த்து ஐந்து நிமிடம் வரைக்கும் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாக்களை சேர்த்து நன்கு வதக்கவும். மசாலா கொதித்தவுடன் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சுவைக்கு ஏற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும் அடுத்து அதில் காலிஃப்ளவரை சேர்த்து வதக்கவும். காலிபிளவர் மசாலாவுடன் நன்கு கலந்தவுடன், கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள்.கிரேவி நன்கு கொதித்ததும் அதில் எடுத்து வைத்த தயிரை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இறுதியாக அதில் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் காலிஃப்ளவர் கிரேவி ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D