Garlic Milk: உங்கள் செரிமான பிரச்சனைக்கு உடனடி நிவாரணம் கிடைக்க பூண்டு பால் உங்களுக்கு உதவும்..!!

Published : Jul 14, 2023, 12:33 PM ISTUpdated : Jul 14, 2023, 12:38 PM IST
Garlic Milk: உங்கள் செரிமான பிரச்சனைக்கு உடனடி நிவாரணம் கிடைக்க பூண்டு பால் உங்களுக்கு உதவும்..!!

சுருக்கம்

செரிமான பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்க பூண்டு பால் குடிங்கள். இதனை எவ்வாறு தயாரிப்பது என்பதை குறித்து இங்கு பார்ப்போம்.

இந்த உலகமயமாக்கப்பட்ட உலகில், வீட்டிலேயே தின்பண்டங்களை செய்யும் பழக்கம் விரைவாக குறைந்து வருகிறது. அதற்கு பதிலாக சிப்ஸ் மற்றும் பிஸ்கட்களால் போன்றவற்றை மக்கள் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இது பல செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் அவை வளர்சிதை மாற்றத்தை குறைக்கலாம். பல்வேறு வயதினரிடையே, இந்த செரிமான பிரச்சினைகள் மிகவும் பொதுவானவை. இதில் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS), அழற்சி குடல் நோய்க்குறி (IBD), இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) ஆகியவை ஆகும். 

செரிமான பிரச்சினைகளில் இருந்து விடுபடுவது எப்படி?
ஆயுர்வேதம் படி, செரிமான பிரச்சினைகளில் இருந்து சுலபமாக விடுபட முசியும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயுர்வேதம் நோயெதிர்ப்பு மண்டலத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பூண்டு பால், உங்களின் அனைத்து செரிமான பிரச்சனைகளுக்கும் எளிதில் தீர்வு வழங்கும். பசி மற்றும் செரிமானம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு பூண்டு இறுதி தீர்வாக உள்ளது. மேலும் ஆயுர்வேதத்தில் பூண்டு ஒரு மருந்தாக கருதப்படுகிறது. எனவே இது செரிமான பிரச்சினைகள் தவிர்த்து உங்கள் உடலுக்கு பலவித நன்மைகளையும் வழங்குகிறது.

பூண்டு பால் தயாரிக்கும் முறையைப் பார்ப்போம்:

தேவையான பொருட்கள்:
பூண்டு - 5 கிராம்
பால் - 50 மி.லி
தண்ணீர் - 50 மி.லி

இதையும் படிங்க: ஆண்களே தினமும் பூண்டு சாப்பிடுங்க ப்ளீஸ்!!

செய்முறை:

  • பால் மற்றும் தண்ணீரில் பூண்டு விழுது சேர்க்கவும்.
  • 50 மில்லி அளவு குறையும் வரை கொதிக்க வைக்கவும்.
  • தினமும் இரண்டு வேளை உணவுக்குப் பிறகு 10 மிலி வடிகட்டி குடிக்கவும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பானிபூரி சாப்பிட முயன்ற பெண் திறந்த வாயை மூட முடியாமல் தவிப்பு.. ஷாக்கிங் வீடியோ!
சாம்பாரை கண்டுபிடித்த ஊர் தஞ்சாவூர்..! சசி தரூர் சொன்ன சாப்பாட்டு மேட்டர்!