Weight Loss Tips: எடை இழப்புக்கு எது சிறந்தது?  பச்சை அல்லது ஊறவைத்த பாதாம்?

By Kalai Selvi  |  First Published Jul 2, 2023, 10:00 AM IST

இந்த நாட்களில் நீங்கள் உடல் எடையை குறைக்கும் வேண்டும் என்று நினைத்தால், கண்டிப்பாக பாதாம் பருப்பை சாப்பிட வேண்டும். அந்தவகையில், எடை இழப்புக்கு பச்சை பாதம் அல்லது ஊற வைத்த பாதா இவற்றில் எது சாப்பிட வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.


இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் உடல் எடையை குறைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கு உங்கள் உணவில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். நீங்கள் உடல் எடையை குறைக்கும் போது,   உங்கள் உணவில் பருப்பு வகைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றிலும் பாதாமை உட்கொள்வது மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. உண்மையில், ஆரோக்கியமான கொழுப்புகள் முதல் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை பாதாமில் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி, அவற்றை உட்கொள்ளும் போது,  அது ஒரு திருப்தி உணர்வைத் தருகிறது. அதாவது பாதாமை உட்கொண்ட பிறகு, நீங்கள் ஒரு நிறைவான உணர்வைப் பெறுவீர்கள், மேலும் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களை உண்ணும் விருப்பமும் குறைகிறது. 

எடை இழப்புக்கு பாதாம் மிகவும் நல்லது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பாதாமை ஊறவைத்து சாப்பிட வேண்டுமா அல்லது பச்சையாக சாப்பிட வேண்டுமா என்ற கேள்வி நம் அனைவர் மனதிலும் அடிக்கடி எழும். எனவே, இப்பதிவில் நாம் எடை இழப்புக்கு பச்சையாக அல்லது ஊறவைத்த பாதாம் பருப்பில் எதைச் சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

எடை இழப்புக்கு பாதாமின் நன்மைகள்:

  • உடல் எடையைக் குறைக்கும் பயணத்தின் போது பாதாம் பருப்பை உட்கொண்டால், அதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம். உதாரணத்திற்கு, 
  • பாதாமில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ஒப்பீட்டளவில் அதிக கலோரிகளைக் கொண்டிருந்தாலும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருந்தாலும், அவை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், எடையைக் குறைக்கவும் உதவுகின்றன. 
  • பாதாம் பருப்பை உட்கொள்வதால் மனநிறைவு ஏற்படும். இதன் காரணமாக ஆரோக்கியமற்ற உணவு அல்லது அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இதுவும் உங்கள் உடல் எடையை எளிதாகக் குறைக்கும்.   
  • மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் பாதாமில் காணப்படுகின்றன. பாதாமை அளவாக உட்கொள்ளும்போது,   அவை பசியைக் கட்டுப்படுத்தவும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிலைப்படுத்தவும் உதவுகின்றன. இது எடை இழப்பிலும் சாதகமான விளைவைக் கொண்டுள்ளது. 
  • உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் பாதாம் உதவியாக இருக்கும். உங்கள் வளர்சிதை மாற்றம் உகந்ததாக செயல்படும் போது,   உணவு கொழுப்பிற்கு பதிலாக ஆற்றலாக மாற்றப்படுகிறது. எது எடையைக் குறைக்க உதவுகிறது.

எப்படி பயன்படுத்த வேண்டும்?
எடை இழப்புக்கு ஊறவைத்த பாதாம் அல்லது பச்சையான பாதாம் பருப்பு எது என்று இப்போது கேள்வி எழுகிறது. பாதாம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது உண்மைதான், ஆனால் எடை இழப்புக்கு ஊறவைத்த பாதாம் சாப்பிடுவது நல்லது . உண்மையில், நீங்கள் பச்சையாக பாதாம் சாப்பிடும் போது,   அதில் உள்ள தடுப்பான்கள் பாதாம் நன்றாக கரைவதில்லை. இதனால் உடலுக்கு அந்த சத்துக்கள் கிடைப்பதில்லை. அதேசமயம், பாதாமை தண்ணீரில் ஊறவைக்கும் போது,   தண்ணீரில் உள்ள ஈரப்பதம் அந்த தடுப்பான்களை அழிக்கிறது. இதன் காரணமாக உங்கள் உடல் பாதாமில் உள்ள ஊட்டச்சத்துக்களை சிறந்த முறையில் உறிஞ்சிக் கொள்ள முடியும். இது உடல் எடையை மிகவும் எளிதாக்குகிறது.

இதையும் படிங்க: Almonds: அழகும், இளமையும் மேம்பட தினமும் இந்த பருப்பை சாப்பிடுங்க!

முக்கிய குறிப்பு:
சிலர் பாதாம் பருப்பை ஊறவைத்த பின் தோலை உரிக்கிறார்கள். ஆனால் நீங்கள் பாதாம் பருப்பிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெற விரும்பினால், பாதாமின் தோலை அகற்ற மறக்காதீர்கள். பாதாம் தோலில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம். எனவே, எப்போதும் பாதாமை ஊறவைத்த பின்னரே, தோலுரிக்காமல் சாப்பிடுங்கள்.

click me!