சம்மரில் லிச்சி பழம் சாப்பிட்டு பாருங்க! தித்திப்பு சுவையுடன் ஏராளமான அற்புத நன்மைகள் இருக்கு!

By Ma riya  |  First Published May 9, 2023, 7:57 AM IST

கோடைகாலத்தில் லிச்சி பழம் சாப்பிட்டால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். 


லிச்சி பழம் வெளியே பார்க்க மென்மையான முட்கள் கொண்டிருக்கும். இளஞ்சிவப்பு நிறத்தில் முட்டை வடிவமாக இருக்கும் லிச்சி பழம் தித்திப்பான சுவையில் இருக்கும். கோடைகாலத்தில் லிச்சி பழம் சாப்பிடுவதால் ஆரோக்கியமான நன்மைகளை பெறலாம். எடை குறைப்பு முதல் குளிர்ச்சி வரை உடலில் அற்புதம் செய்துவிடும். 

லிச்சியின் சத்துக்கள் 

Tap to resize

Latest Videos

வைட்டமின் சி, டி, கே, ஈ ஆகியவை லிச்சியில் உள்ளன. அதுமட்டுமின்றி, வைட்டமின் பி 1, பி 2, பி 3, பி 6 வரைக்கும் ஏராளமான வைட்டமின்கள், வைர்ரிபோஃப்ளேவின், உடலுக்கு தேவையான அத்தியாவசியமான கனிம தாதுக்கள், பொட்டாசியம், துத்தநாகம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. 

லிச்சி பழத்தின் நன்மைகள்

  • கோடையில் உடலில் நீர்ச்சத்து தேவையாக இருக்கும். லிச்சியில் பழச்சாறு நிறைந்து காணப்படும். இந்த பழத்தில் 80 சதவீதம் வரை நீர்ச்சத்து உள்ளது. இது கோடையில் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். 
  • லிச்சி சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க முடியும். இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அதனால் செரிமான கோளாறு ஏற்படாது. உடலுக்கு செரிமான சக்தி கிடைக்கும்.

இதையும் படிங்க: ரத்தத்தை சுத்திகரிக்கும் இயற்கை உணவுகள்!

  • லிச்சி பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது. இதில் நல்ல அளவு பொட்டாசியம் உள்ளதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதன் காரணமாக இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். 
  • லிச்சியை உண்பதால் வைட்டமின் சி அதிகம் கிடைக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். 
  • கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற பழம் லிச்சி. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். 
  • கோடைகாலத்தில் லிச்சி சாப்பிடுவது வெப்ப பக்கவாதத்தின் அபாயத்தைக் குறைக்கும். ஏனென்றால் இதில் வைட்டமின் சி,  ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. 

இதையும் படிங்க: சியா விதைகளின் நன்மைகள் தெரிந்திருக்கும்.. ஆனால் அதுல பக்கவிளைவுகள் இவ்ளோ இருக்கு!!

click me!