கோடைகாலத்தில் புட் பாய்சன் பிரச்சனை வர என்ன காரணம், எப்படி தடுக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
வெயில் காலத்தில் சில உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு செய்கின்றன. உணவு நஞ்சாகும் போது வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகின்றன. காரசாரமான உணவுகள், துரித உணவுகள் வயிற்றை மந்தமாகி செரிமான கோளாறுகளை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த பிரச்சனை பொதுவாக குழந்தைகள், முதியவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது.
நாம் சாப்பிடும் உணவுகளில் பாக்டீரியா, வைரஸ்கள், நோய்க்கிருமிகள் தொடர்பு கொள்ளும்போது, விரைவில் கெட்டுபோகிறது. இவற்றை நாம் உண்ணும்போது ஃபுட் பாய்சன் ஆகும். அதுவும் கோடையில் பழைய உணவுகளை சாப்பிடுவது வயிற்றை அடிக்கடி சேதப்படுத்தும். இதுமட்டுமல்ல, நிரீழப்பு, வெப்ப பக்கவாதம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
கோடைகாலத்தில் நமது செரிமான அமைப்பு மெதுவாக வேலை செய்யும். ஆகவே உணவை நன்றாக ஜீரணிக்க முடியாது. அதனால் தான் கோடை காலத்தில் மிதமான உணவை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. அதிகமாக தண்ணீர் குடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
ஃபுட் பாய்சன் ஆக காரணங்கள்
நாம் சமைக்கும் காய்கறிகளை நன்றாக கழுவாமல் வைத்திருப்பது, சமைத்த உணவை சரியாக பதப்படுத்தாமல் விடுவது, உண்ணும் தட்டை சுத்தமாக கழுவாமல் உண்பது ஆகிய காரணங்களும் ஃபுட் பாய்சனுக்கு வழிவகுக்கும். வீட்டு உணவுகளை தவிர்த்து வெளியே சுகாதாரமில்லாத உணவை உண்பதாலும் ஃபுட் பாய்சன் வரலாம். கோடைகாலத்தில் ஐஸ் கட்டிகளை போட்டு ஜூஸ், குல்பி போன்ற ஐஸ்கிரீம் சாப்பிடுவோம். சுகாதாரம் இல்லாத தண்ணீரில் தயாரித்த ஐஸ் கட்டிகள், குல்பி ஆகியவையும் ஃபுட் பாய்சனை வரவைக்கும்.
கோடையில் உணவு கெட்டுபோக என்ன காரணம்?
வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதம், அதிகரித்த வெப்பநிலை ஆகியவற்றின் காரணமாக, நோய்க்கிருமிகள் உணவை எளிதில் கெடுக்கும். இந்த உணவை உண்பதால் ஃபுட் பாய்சன் ஆகிறது.
ஃபுட் பாய்சன் அறிகுறிகள்
மோசமான உணவை நாம் சாப்பிட்டு அதனால் பாதிப்பு ஏற்படுகிறது என்றால், பின்வரும் அறிகுறிகள் ஏற்படும். அதாவது, வயிற்று வலி அல்லது வயிற்றில் பிடிப்புகள், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், மயக்கம் ஆகியவை ஏற்படும்.
டிப்ஸ்!
உடல் சூட்டினால் ஃபுட் பாய்சன் ஆகலாம். இதனால் அடிவயிறு ரொம்ப வலிக்கும். இந்த வயிற்று வலியை குறைக்க நாமக்கட்டியை நீரில் குழைத்து அடிவயிற்றில் பூசுங்கள். பேதியும் ஆகலாம். ஒரு கைப்பிடி சீரகம் எடுத்து மிதமாக வறுத்து, 1 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அருந்தினால் உடல் சூடு தணிந்து வலி குறையும்.
இதையும் படிங்க: குழந்தைக்கு அடிக்கடி ஹெல்த் டிரிங்க்ஸ் கொடுக்குறீங்களா? அதனால் வரும் பாதிப்புகள் தெரியுமா?
கோடைகால உணவு கவனம்!!
இதையும் படிங்க: வெயில் காலத்தில் வயிறு குளிர! இந்த புதினா பானம் குடித்து பாருங்கள்..