பூசணிக்காய் என்றாலே பலர் முகம் சுழிப்பார்கள். ஆனால் இந்த நீர்க்காயில் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்துள்ளது தெரியுமா? இந்தக் காயில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இப்போது இப்பதிவில் பார்க்கலாம்.
பூசணிக்காய் என்பது பலரும் சாப்பிட விரும்பாத ஒரு நீர்க்காய் ஆகும். இதற்கு அரசாணிக்காய் என்ற மற்றொரு பெயரும் உண்டு. பெரும்பாலும் இது சாம்பல் பூசணி, சிவப்பு பூசணி, மஞ்சள் பூசணி, சர்க்கரை பூசணி என்று அழைக்கப்படுகிறது. இதில் கொழுப்பு இல்லை. இதில் வைட்டமின்கள், நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், காப்பர் மற்றும் ஜிங்க் என இப்படி சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. இப்படி சத்துக்கள் நிறைந்துள்ள பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
பூசணிக்காய் நன்மைகள்:
கண் பார்வை: பூசணிக்காயில் வைட்டமின் ஏ ஏராளமாக உள்ளதால் இது கண்பார்வை மற்றும் கண் கோளாறுகளை சரிசெய்ய பெரிதும் உதவுகிறது.
உடல் சூட்டை தணிக்க: இதில் வைட்டமின்கள் பி, சி உள்ளது. இது உடல் சூட்டை தணித்து, குளிர்ச்சியை தருகிறது. அதுமட்டுமின்றி, இது இருமலை குணமாக்க சிறந்த அருமருந்தாகும்.
இதையும் படிங்க: உங்கள் சருமம் வெள்ளையாக மாறனுமா? அப்போ இந்த ஜூஸை குடிங்க..!!
உடல் எடை குறைய: கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, இ, சி மற்றும் நார்ச்சத்து இந்த காயில் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான முறையில் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் எடை குறைக்க விரும்புவர்களுக்கு இது மிகவும் சிறந்த காய்கறியாகும். மேலும் இதில் பெக்ட்டின் என்ற வேதிப்பொருள் உள்ளதால், இது கொழுப்பை குறைக்க பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த காயை நீங்கள் தோளுடன் சேர்த்து ஜூஸ் அரைத்து வெறும் வயிற்றில் குடித்தால் எந்த விதமான நோயும் உங்களை நெருங்காது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: என்னது பூசணி விதையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!!
நல்ல தூக்கத்தை கொடுக்கும்: தூக்கம் வராமல் அவதிப்படுவதற்கு இந்த காய் பெஸ்ட் காயாகும். இந்தக் காயில் நீங்கள் ஜூஸ் போட்டு ஒரு டம்ளர் குடித்தால் தூக்கம் நன்றாக வரும்.
சிறுநீரகப் பிரச்சனை நீங்கும்: சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து பத்து நாள் இந்த ஜூஸை மூன்று வேளை, அதுவும் அரை டம்ளர் அளவு குடித்து வந்தால் விரைவில் குணமாவீர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பிற நன்மைகள்: