அச்சு முறுக்கு என்றால் நம்மில் பலருக்கும் என்னவென்பது தெரியாது. தமிழர்களின் பாரம்பரிய பலகாரங்களில் ஒன்றாக இது இருக்கிறது. செய்வது எளிது. இதற்கு என்று இருக்கும் அச்சு வாங்கி வைத்துக் கொண்டால் நிமிட நேரங்களில் வீட்டிலேயே தயாரித்து விடலாம்.
அச்சு முறுக்கு செய்வது எவ்வாறு என்று பார்ப்போம்:
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1 கப்
நாட்டு சர்க்கரை - 1/2 கப்
கருப்பு எள்ளு அல்லது வெள்ளை எள்ளு - 2 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன்
முதலில் தேவையான அரிசி, கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு ஏலக்காய் பொடி, நாட்டு சர்க்கரை, உப்பு, எள் ஆகியவற்றை சேர்த்து கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.தண்ணீருக்கு பதில் தேங்காய் பாலும் சேர்க்கலாம். சாப்பிட சுவையாக இருக்கும்.
இனி கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் முறுக்கு அச்சை எண்ணெயில் வைத்து எடுக்கவும். அச்சு சூடான பின்னர் மாவில் அச்சை முக்கி எடுத்து எண்ணெயில் வைக்க வேண்டும். அப்படி வைக்கும்போது அச்சில் இருக்கும் மாவு வடிவம் எண்ணெயில் விழுந்து விடும். தற்போது அச்சு முறுக்கு ரெடி. சுவைத்துப் பாருங்கள். வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.