தீபாவளிக்கு "இந்த" வடை செஞ்சி உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்...

By Kalai SelviFirst Published Nov 9, 2023, 4:21 PM IST
Highlights

இந்த தீபாவளிக்கு சூப்பரான இந்த இரண்டு விதமான வடைகளை செய்யுங்கள். இதனை உங்கள் குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் அதை விரும்புவார்கள்.

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இதனால் நீங்கள் ரொம்பவே பரபரப்பாகவே இருப்பீர்கள். எல்லா சலசலப்புக்கும் இடையில், பண்டிகைக்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பது கடினம். எனவே, நீங்கள் விரைவாகச் செய்யக்கூடிய 2 சூப்பரான வடைகளை குறித்து இங்கு பார்க்கலாம். இதனை உங்கள் குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் அதை விரும்புவார்கள்.

மசால் வடை:
தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு - 1 கப்
பெரிய வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 3
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
இஞ்சி துண்டு - 1
சின்ன பட்டை துண்டு - 1
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்
கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு

இதையும் படிங்க:  தித்திக்கும் தீபாவளி : நாவூறும் தீபாவளி ஸ்பெஷல் ஸ்நாக்ஸ், ஸ்வீட் ரெசிப்பீஸ் இதோ..

செய்முறை:

  • மசால் வடை செய்ய முதலில் கடலை பருப்பை நன்கு கழுவி சுமார் 3 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
  • பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, புதினா, மற்றும் கருவேப்பிலையை ஆகியவற்றை நறுக்கி ஒரு தட்டில் வைக்க வேண்டும். இவற்றுடன் பூண்டு தோலுரித்து தட்டி வைக்க வேண்டும். 
  • இதனையடுத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு, பட்டை, காய்ந்த மிளகாய், மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். மேலும் இவற்றுடன் ஊற வைத்திருக்கும் கடலை பருப்பில் இருந்து 2 தேக்ககரண்டி அளவு மட்டும் கடலை பருப்பை எடுத்து தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துவிட்டு, மீதமுள்ளதை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 
  • பருப்பு கொரகொரப்பான பதத்தில் அரைத்தால் போதும். பிறகு ஒரு பாத்திரத்தில் அவற்றை வைத்து கொள்ள வேண்டும். இப்போது இவற்றில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா, பூண்டு, மேலும் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் கடலை பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளற வேண்டும். 
  • இப்போது இந்த மாவிலிருந்து சிறிதளவு மாவை எடுத்து அதை வடையாக தட்டி ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். 
  • அதன்பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்க வேண்டும். எண்ணெய் சுட்டதும், அதில் நாம் தட்டி வைத்திருக்கும் வடைகளை அதில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். வடை இரு புறமும் நன்கு பொன்னிறமானதும் அதை எடுக்க வேண்டும். 
  • இப்போது, சூடான மற்றும்  மொறு மொறுப்பான மசால் வடை ரெடி! இந்த தீபாவளிக்கு இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்...

இதையும் படிங்க:  இந்த தீபாவளிக்கு பெங்காலி ஸ்வீட் வெல்ல சந்தேஷ் செய்யலாம்!

முட்டைகோஸ் வடை:
தேவையான பொருள்கள்

உளுத்தம்பருப்பு – 200 கிராம்
கடலைப்பருப்பு - 100 கிராம்
முட்டைக்கோஸ் - 1/2 கப்
கடலை மாவு - 1/2 கப்
மிளகு - 1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - 1/2
பச்சைமிளகாய் - 2 
வெங்காயம் - 1
கேரட் - 1
கொத்தமல்லி
உப்பு

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

செய்முறை:

  • முட்டைகோஸ் வடை செய்ய முதலில், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு நன்கு கழுவி 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 
  • அவை நன்கு ஊறிய பின் மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். இவற்றுடன் பெருஞ்சீரகம், சீரகம்  மற்றும் மிளகு சேர்த்து அரைக்க வேண்டும். 
  • இப்போது இந்த மாவுடன் நறுக்கிய முட்டைக்கோஸ், பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி இலை மற்றும் துருவிய இஞ்சி, கேரட், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை நன்கு கிளற வேண்டும். 
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்க வேண்டும். எண்ணெய் சுட்டதும், அதில் இந்த மாவை வடையாக தட்டி போட்டு எடுக்க வேண்டும். இப்போது சுவையான முட்டைக்கோஸ் வடை ரெடி! இந்த தீபாவளிக்கு இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்...
click me!