கோடைகாலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இதனை வாரம் 1 முறை சாப்பிடுங்க!

By Asianet Tamil  |  First Published Mar 10, 2023, 10:04 AM IST

இத்தனை மருத்துவ பயன்களை அள்ளித்தரும் வெந்தயம் வைத்து மசியல் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்


கோடை வெப்பத்தில் இருந்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள தண்ணீரில் வெந்தயம் ஊற வைத்து பருகி வந்தால் உடல் சூடு குறையும் .மேலும் வெந்தயம் சேர்ந்த உணவுகளை அவ்வப்போது எடுத்துக் கொள்வதால் சிறுநீர்க் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் போன்ற சிறுநீரக நோய் தொற்றுகளை குறைக்கும் .

வெந்தயத்தில் இருக்கும் சர்க்கரை எதிர்ப்புப் பண்புகள் இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி டைப்-1 சர்க்கரை நோயைக் குணப்படுத்துகிறது. மேலும் இதில் அதிக அளவு பொட்டாசியம் காணப்படுவதால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு முதலியவையை கட்டுப்படுத்தும்.

பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் உண்டாகும் வலியை போக்க எந்த ஒரு பக்க விளைவில்லாத மருந்தாகும் .இத்தனை மருத்துவ பயன்களை அள்ளித்தரும் வெந்தயம் வைத்து மசியல் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

வெந்தயம் - 25 கிராம்
துவரம்பருப்பு - 200 கிராம்
பச்சை மிளகாய்- 2
வர மிளகாய் -2
கடுகு- 1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 ஸ்பூன்
புளி - சிறிய அளவு
மல்லித்தழை-கையளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.

சூடான சாதத்துடன் இந்த ஹரியாலி முட்டை கிரேவி மட்டும் போதும் !வேறு எதையும் தேடவே மாட்டார்கள்.

செய்முறை:

முதலில் துவரம் பருப்பு மற்றும் வெந்தயத்தை ஓடும் தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் அலசிய துவரம்பருப்பு, வெந்தயம் மற்றும் மஞ்சள்தூள் ஆகியவை சேர்த்து தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 4 விசில் வைத்து வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

ஒரு பௌலில் புளியை சேர்த்து 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். வர மிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ள வேண்டும். மல்லித்தழையை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்துஅதில் சிறிது எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடான பின் கடுகு, வர மிளகாய் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் புளிக் கரைசலை சேர்த்து பெருங்காயத்தூள் மற்றும் நன்றாக கலக்கி விட்டு பின் சிம்மில் வைத்து சில நிமிடங்கள் வேண்டும்.இப்போது வேக வைத்துள்ள வெந்தய பருப்பு கலவையைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி இறுதியாக பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவி பரிமாறினால் சத்தான வெந்தய மசியல் ரெடி!

Latest Videos

click me!