சைட்டிஷ்க்கு இப்படி ஒரு முறை பலாக்காய் பொரியல் செய்து சாப்பிடுங்க!

By Asianet Tamil  |  First Published Mar 14, 2023, 5:46 PM IST

வாருங்கள்! பலாக்கொட்டை பொரியல் ரெசிபியை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 


தினமும் மதிய உணவுக்கு என்ன சைட் டிஷ் செய்ய என்று யோசிச்சு செய்வதே கடினமான வேலை ஆகும். எப்போதும் பீன்ஸ்,கேரட், முருங்கை,கோஸ், பட்டாணி என்று சிகேத காய்கறிகளையே செய்து அலுத்து போனவர்களுக்கு இந்த பதிவு மிக உதவியாக இருக்கும்.இன்று நாம் பலாக்கொட்டை வைத்து பொரியல் ரெசிபியை செய்ய உள்ளோம். இதனை தயிர் சாதம்,சாம்பார் சாதம், லெமன் சாதம் போன்ற சாத வகைகளுக்கு வைத்து சாப்பிட்டால் அருமையான சுவையில் இருக்கும். 

வாருங்கள்! பலாக்கொட்டை பொரியல் ரெசிபியை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

Latest Videos

undefined

 

தேவையான பொருட்கள்:

பலாக்கொட்டை – 200 கிராம்
வெங்காயம் – 1
இஞ்சி-பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்
தக்காளி – 1
பூண்டு – 3 பற்கள்
மிளகாய்தூள் – 1 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்,
மல்லித்தழை –கையளவு
எண்ணெய் -தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு

வீட்டில் கடனே இல்லாமல் இருக்க , பணவரவு இருந்து கொண்டே இருக்க பெண்கள் வேண்டிய 5 விஷயங்கள்!

செய்முறை:

முதலில் பலாக்கொட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் 3 கப் அளவு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு தூவி சேர்த்து அடுப்பில் சிம்மில் வைத்து சுமார் 1/2 மணி நேரம் வரை வேக வைக்க வேண்டும்.பலாக்கொட்டை நன்றாக வெந்த பிறகு, பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். பின் அவைகளை ஆற விட்டு தோல் உரித்து 2 அல்லது 3 பீஸ்களாக வெட்டி கொள்ள வேண்டும்.

இப்போது தக்காளி மற்றும் வெங்காயத்தை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பூண்டை இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பின் அதில் கடுகு, சீரகம் மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவை சேர்த்து தாளித்துக் கொண்டு அடுத்தாக அதில் இடித்து வைத்துள்ள பூண்டு மற்றும் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

இப்போது அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு பின் தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கி விட வேண்டும் . பின்னர் உப்பு மற்றும் பெருங்காயத் தூள் நன்றாக கிளறி விட்டு மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி தட்டு போட்டு மூடி கொதிக்க வைக்க வேண்டும்.

இப்போது மசாலாவின் தண்ணீர் முழுவதும் வற்றி சுண்டி வந்த பிறகு பலாக் கொட்டைகளை சேர்த்து கிளறி விட வேண்டும். அடுப்பை தீயினை சிம்மில் வைத்து 10 நிமிடம் வரை வேக விட செய்து அடுப்பில் இருந்து இறக்கி அதன் மேல் கறிவேப்பிலை மற்றும் பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழை ஆகியவை சேர்த்து பரிமாறினால் பலாக்கொட்டை பொரியல் ரெடி!

click me!