சமைக்காமல் இதை அப்படியே சாப்பிட்டால் போதும்.. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள்..!

By Ma RiyaFirst Published Mar 14, 2023, 4:14 PM IST
Highlights

Immunity booster: பருவகால மாற்றங்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை சேதப்படுத்தும். ஆனால் சில உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை பாதுகாக்கும். அதன் முழுவிவரங்களை இங்கு காணலாம். 

நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாக இருந்தால் பல நோய்களின் அபாயத்தைக் குறைக்க முடியும். இதுவே தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுகிறது. சில நேரங்களில் நமக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம். காலநிலை மாற்றத்துடன், நம்மை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உடலுக்கு கூடுதல் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. அதுவே நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தற்போது மாறிவரும் பருவத்தில் எந்த வகையான உணவுகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 

தர்பூசணி பழம்..! 

தர்பூசணியில் 90% நீர்ச்சத்து காணப்படுகிறது. லைகோபீன், வைட்டமின் சி, கரோட்டினாய்டுகள், 6% சர்க்கரைகள் கூட இதில் நிறைந்துள்ளது. இந்த பழத்தை துண்டுகளாக்கி ருசிக்கலாம்.. அல்லது பழச்சாறு செய்து குடிக்கலாம். வெயில் காலத்தில் நம் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதோடு ஆற்றல் அளவையும் அதிகரிக்கிறது. 

நாவல் பழம் 

இந்த பழங்களில் 80% புரதச்சத்து, 16% கார்போஹைட்ரேட் காணப்படுகிறது. இதில் வைட்டமின் சி, பாலிபினால்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவையும் உள்ளன. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும். இரத்தச் சர்க்கரை அளவை குறைக்கும். இதய நோய்களில் இருந்து விடுதலை தரும். 

மாம்பழம் 

பழங்களின் அரசன் என மாம்பழத்தை சொல்வார்கள். இந்த பழத்தில் பீட்டா கரோட்டின், ஆக்ஸிஜனேற்றிகள், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை உள்ளன. இந்த பழம் வீக்கத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும். நார்ச்சத்து அதிகம் உள்ள இந்தப் பழம் மலச்சிக்கலுக்கு குட் பை சொல்ல வைக்கும். மாம்பழச் சாற்றில் பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கிஃபெரின் ஆகியவை காணப்படுகின்றன. இது சூரிய வெப்பத்தை தடுக்க உதவுகிறது.

சுரைக்காய்

சுரைக்காய் அதிக நீர்ச்சத்து கொண்டது. அது மட்டுமின்றி வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளேக்ஸ், வைட்டமின் கே, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, இரும்பு, ஃபோலேட், பொட்டாசியம், மாங்கனீஸ் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துகளும் இந்த காயில் அதிகம் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமானத்தை அதிகரிக்க நமக்கு உதவுகின்றன.

இதையும் படிங்க: மோர் உடல் சூட்டை தான் தணிக்கும்னு நினைச்சிருப்பீங்க.. ஆனா 1 டம்ளர் மோர் குடித்தால்.. இத்தனை நன்மைகள் இருக்கு!

இளநீர் 

இளநீரில் கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள் மிகவும் குறைவு. அனைவரும் அருந்தலாம். பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் நிறைந்த எலக்ட்ரோலைட்டுகள் உங்கள் உடலுக்கு தாதுக்களை வழங்குகின்றன. உங்களை இந்த வெயில் கொடுமையில் நீரேற்றமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். 

துளசி விதைகள்

துளசி விதைகள் சாதாரணமானவை அல்ல. இதில் இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், ஆல்பா-லினோலெனிக் அமிலம் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. இது நீரேற்றம், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்க, நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது.

தயிர்

வெயில் காலத்தில் அனைவரும் உண்ணக்கூடிய பொருள் தயிர். இதனை மோராக கரைத்து குடித்தால் இன்னும் சூப்பர் பலன் கிடைக்கும். தயிர் புரோபயாடிக் உணவு மட்டுமல்ல, கால்சியம், புரதத்தின் நல்ல மூலமாகும். இது பற்கள், எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. செரிமானத்திற்கும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. 

இதையும் படிங்க: தொப்பை மொத்தமா போகணுமா? இந்த விஷயங்களை மட்டும் ஒரு மாதம் தவிர்த்து பாருங்க..கொழுகொழு தொப்பையும் கடகடனு கரையும்

click me!