இட்லி,தோசைக்கு ஒரு முறை இப்படி கிராமத்து ஸ்டைலில் மாப்பிள்ளை சொதி செய்து அசத்துங்க!

By Asianet Tamil  |  First Published Mar 13, 2023, 10:08 PM IST

வாருங்கள்! தேங்காய் எண்ணெய்யின் வாசனையில் அட்டகாசமான மாப்பிளை சொதி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்


தினமும் மதிய சாதத்திற்கு சாம்பார்,குழம்பு, ரசம் என்று செய்து அலுத்து போய் விட்டதா? கொஞ்சம் வேற சுவையில் ஏதாவது செய்யவேண்டுமென்றால் இந்த மாப்பிள்ளை சொதியை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. சாதத்திற்கு மட்டுமல்லாமல் இட்லி,தோசை,இடியாப்பம் ,ஆப்பம் போன்றவைக்கும் சேர்த்து சாப்பிடலாம். தேங்காய் பாலில் செய்வதாலும், தேங்காய் எண்ணெயில் செய்வதாலும் இது தனித்துவமான சுவையில் இருக்கும். இதனை திருமணத்தின் அடுத்த நாள் மாப்பிளை பெண் வீட்டுற்கு விருந்துக்கு செல்லும் போது சமைத்து பரிமாறுவைத்து பழக்கமாக இருந்தது.

வாருங்கள்! தேங்காய் எண்ணெய்யின் வாசனையில் அட்டகாசமான மாப்பிளை சொதி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 100 கிராம்
காய்கறிகள்- 1 கப்
பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, நறுக் கிய முருங்கைக்காய்)
சின்ன வெங்காயம் - 10
தேங்காய் - 1
மஞ்சள்தூள் - 1/4ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 8 பற்கள்
பச்சை மிளகாய் - 6
சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
மல்லித் தழை - கையளவு
எலுமிச்சைச் சாறு - 1ஸ்பூன்
நெய்- தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு,

குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க செய்ய "வல்லாரை சட்னி"செய்து கொடுங்க!

Latest Videos

செய்முறை:

முதலில் அடுப்பில் பாசிப்பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி, வேக வைத்து எடுத்துக் கொண்டு அதனை மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி அதனை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து பால் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கேரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு ஆகியவற்றை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று முருங்கைக்காயையும் சற்று சிறிய அளவில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தாக இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம், ஆகியவற்றை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் விலாசமான கடாய் அல்லது மண் சட்டி வைத்து குடில் சிறிது எண்ணெய் விட்டு,எண்ணெய் சூடான பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் முதலியவை சேர்த்து வதக்கி விட வேண்டும்.

இப்போது சிறிது தேங்காய்ப் பால் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்ற வேண்டும். இப்போது இதில் பொடியாக அரிந்து வைத்துள்ள கேரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு, மற்றும் முருங்கை சேர்த்து வேக விட வேண்டும்.
காய்கறிகள் வெந்த பின் அதில் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இப்போது மீதமுள்ள தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்க ஆரம்பித்து நுரைத்து வரும் போது சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் நெய் விட்டு,நெய் உருகிய பின்னர் சீரகம், கறிவேப்பிலை, மல்லித் தழை ஆகியவை சேர்த்து தாளித்தால் மாப்பிளை சொதி ரெடி! இதனை இடியாப்பத்திற்கு வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

click me!