கேன்சரை தடுக்குமா வாக்கிங்? எத்தனை காலடிகள் நடக்கனும் தெரியுமா?

Published : May 17, 2025, 08:39 AM IST
repair cancer cells

சுருக்கம்

ஒரு நாளுக்கு 9 ஆயிரம் அடிகள் நடப்பதால் 13 வகை புற்றுநோய்களின் அபாயம் குறையும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Walking 9000 Steps a Day Decrease The Risk of 13 Cancers : நடப்பது நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நெடுங்காலமாக அறிவுறுத்திவருகின்றனர். நாள் முழுக்க அமர்ந்தே இருப்பது அல்சைமர் நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அது மட்டுமின்றி உடலில் எதிர்மறையான பல விளைவுகளுக்கு அமர்ந்த நிலையில் அதிக நேரம் இருப்பது தான் காரணம். நீங்கள் நடைபயிற்சி செய்யும் போது ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்களாவது நடப்பதும், உடலை இயக்கத்தில் வைத்திருப்பதும் பல நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கும். அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவில் நடப்பது 13 வகை புற்றுநோய்களின் அபாயத்தை குறைப்பதாக தெரியவந்துள்ளது. இந்த பதிவில் அது குறித்து காணலாம்.

இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் செய்யப்பட்ட ஆய்வில் புற்றுநோயை தடுக்க நடைபயிற்சி மறைமுகமாக உதவுவது தெரியவந்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அண்மையில் செய்த இந்த ஆய்வின் முடிவுகள் பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியானது. இந்த ஆய்வில் ஒவ்வொருவரையும் கண்காணிக்கும் வகையில் கையில் அணியக் கூடிய சாதனம் கொடுக்கப்பட்டது. இதில் அவர்களுடைய உடல் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. 6 ஆண்டுகள் நிறைவடைந்த பின் அதிகமான காலடிகள் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பது தெரிய வந்தது. நடையின் வேகம் அல்ல, காலடிகளின் எண்ணிக்கையே முக்கியம்.

புற்றுநோய் தடுப்பு:

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5,000 காலடிகள் நடப்பது புற்றுநோய்களின் ஆபத்தை 11 சதவீதமாக குறைத்தது ஆய்வுகளில் தெரிய வந்தது. 7000 காலடிகள் நடைபயிற்சி மேற்கொள்வது புற்றுநோயின் அபாயத்தை 16 சதவீதம் குறைத்துள்ளது. 9 ஆயிரம் காலடிகளுக்கு மேல் நடப்பது புற்று நோய்கள் ஏற்படும் அபாயத்தை கணிசமாக குறைத்துள்ளது. தினமும் 10 ஆயிரம் காலடிகள் எடுத்து வைப்பது உங்களுடைய ஆரோக்கியத்திற்கு அதிகமான நன்மைகளை செய்யும் என இந்த ஆய்வுகளின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு நாளுக்கு 8000 காலஅடிகள் நடப்பவர்களுக்கும் 5000 காலடிகளுக்கு குறைவாக நடப்பவர்களுக்கும் இடையே ஒப்பீடு செய்யும்போது அவர்களுக்கு அகால மரணம் ஏற்படக்கூடிய அபாயம் பாதியாக குறைந்தது தெரியவந்துள்ளது

புற்றுநோய் அபாயம் எப்படி குறையும்?

நம்முடைய உடல் செயல்பாடு புற்றுநோயின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஹார்மோன்களை ஒழுங்குபடுத்த உதவுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும். அந்த வகையில் அனைத்து வயதினரும் கண்டிப்பாக நடைபயிற்சியை எளிதாக செய்ய முடியும். இதனால் மார்பகம் புரோஸ்டேட், பெருங்குடல், எண்டோமெட்ரியம், கணைய புற்றுநோய்க்கான அபாயங்கள் கணிசமாக குறைகின்றன.

உடல் செயல்பாடு புற்றுநோயின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் சில ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும் என கூறப்படுகிறது. வழக்கமான உடற்பயிற்சி மார்பகம், புரோஸ்டேட், பெருங்குடல், மற்றும் கணைய புற்றுநோய்க்கான குறைந்த அபாயத்துடன் தொடர்புடையது. அவை ஆபத்தைக் குறைக்கும். இவை தவிர உணவுக்குழாய், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், இரைப்பை, எண்டோமெட்ரியல், மைலோயிட் லுகேமியா, மைலோமா, பெருங்குடல், தலை மற்றும் கழுத்து, மலக்குடல், சிறுநீர்ப்பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்கான வாய்ப்புகள் குறித்தும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வு செய்தது.

6 ஆண்டுகள் ஆய்வில் பங்கேற்பாளர்களில் கிட்டத்தட்ட 3 சதவீதம் பேருக்கு அந்த புற்றுநோய்களில் ஒன்று வந்ததிருந்தது தெரியவந்தது. இதற்கும் உடல் செயல்பாட்டுக்கும் தொடர்புள்ளது. ஆகவே நடப்பது உங்களை புற்றுநோய் தாக்கத்தில் இருந்து காக்கும் ஒரு வாய்ப்பாக கருதப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

150 வயசு வரை வாழலாம்.. 'ஸோம்பி' செல்களை அழித்து ஆயுளை நீட்டிக்கும் சீன மாத்திரை!
டிரெட்மில்லில் தடுக்கி விழுந்து பாடம் கற்றுக்கொண்ட ராஜீவ் சந்திரசேகர்! மக்களுக்கு ஒரு அட்வைஸ்!