
These are Reasons Why You Can't Lose Weight by Walking: இன்றைய காலத்தில் பலருக்கும் உடற்பயிற்சிக்கு நேரமில்லை. ஆனால் உடலை ஆரோக்கியமாக பராமரிக்க ஏதேனும் செய்யவேண்டும் என்ற ஆர்வம் பலருக்கும் இருக்கிறது. அதனால் தான் காலை, மாலை என மக்கள் நடைபயிற்சி செய்ய படையெடுக்கிறார்கள். ஆனால் சிலர் வெறும் நடைபயிற்சியில் எடையை குறைக்க வேண்டும் என முயற்சி செய்கின்றனர். அது தவறொன்றும் இல்லை. ஆனால் எடையை குறைக்க நடைபயிற்சியோடு உணவுக் கட்டுப்பாடும் அவசியம்.
தவறுகள்:
வாக்கிங் போனாலும் ஏன் எடை குறையவில்லை?
நமது மூளை எந்த விஷயங்களையும் 15 நாட்களுக்குள் பழகிவிடக் கூடியது. கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் நாம் செய்யும் உடற்பயிற்சிகளை மூளை நன்கு பழகிவிடும். ஒரே மாதிரியான வேகத்தில் தினமும் நீங்கள் நடந்து கொண்டிருந்தால் அதற்கு உடல் பழகிவிடும். அதனால் பலன் கிடைக்காமல் போய்விடும். எடை குறைய மாதம் ஒருமுறையாவது வேகம் மற்றும் தூரத்தை மாற்ற வேண்டும்.
உதாரணமாக நீங்கள் இந்த மாதம் ஒரு கிலோமீட்டர் நடந்தால் அதே தூரத்தை அடுத்த மாதம் கொஞ்சம் கூட்ட வேண்டும். அடுத்த மாதம் 1 கி.மீ மற்றும் 200மீ நடக்கலாம். இப்படி வேகம், தூரம் மாறும்போது அதற்கேற்ற பலன் கிடைக்கும். எடையும் கணிசமாக குறையும்.