கோடை வெயிலால் முகத்தின் நிறம் மாறுகிறதா? அப்போ இந்த பேஸ் பேக் யூஸ் பண்ணுங்க..!

By Kalai SelviFirst Published Apr 18, 2023, 6:09 PM IST
Highlights

கோடை காலத்தில் சரும வறட்சியை நீக்கும் பப்பாளி பேஸ் பேக் வீட்டிலேயே செய்வது எப்படி என இங்கு காண்லாம்.
 

கோடை காலம் வந்து விட்டதால், உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தின் மீதும் தனி கவனம் செலுத்த வேண்டும். இந்த கோடை வெயிலால் முகம் கருமையாக மாறிவிடுகிறது. இதனால் நாம் விலை உயர்ந்த கிரீம்களை பயன்படுத்துகிறோம். ஆனால், வீட்டில் இருக்கும் 2 பழங்களை கொண்டு சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்யலாம். 

வைட்டமின் D அதிகம் உள்ள  ஆரஞ்சு மற்றும் பப்பாளி பழங்கள் கொண்டு, எளிய முறையில் பேஸ் பேக்  செய்வது எப்படி என இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள் :

நன்கு பழுத்த பப்பாளி துண்டுகள் - 1 கப்

ஆரஞ்சு பழ சாறு - 2 ஸ்பூன்

தேன் - ஒரு ஸ்பூன்

பவுல் - ஒன்று

செய்முறை :

நன்கு பழுத்த பப்பாளி ஒன்றை சிறு சிறு துண்டுகளா வெட்டி பவுல் ஒன்றில் வைக்க வேண்டும். இவற்றுடன் ஆரஞ்சு பழ சாறு மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும்.பின்ன்ர், இவை அனைத்தையும் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக மைப்போல அரைத்து எடுத்தால், பேஸ் பேக் தயார்.

பயன்படுத்தும் முறை:

பேஸ் பேக்கை பயன்படுத்துவதற்க்கு முன்,முதலில் உங்கள் முகத்தை நன்றாக தண்ணீரினால் சுத்தம் செய்ய வேண்டும். பின், முகத்தில் ஈரம் இல்லாமல் ஒரு துணியை கொண்டு துடைக்க வேண்டு. அத்ன் பின்னரே தயாரித்த பேஸ் பேக் கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி கொள்ள வேண்டும். இதனை சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே வைக்க வேண்டும். பின்னர், குளிர்ந்த நீரினால் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். 

இக்கலவையுடன் தேனையும் பயன்படுத்தலாம். தேன் பயன்படுத்துகையில் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். இந்த் பேஸ் பேக்கை வாரம் 2 முறை பயன்படுத்தலாம்.

அட! முடி வளர கருஞ்சீரக எண்ணெய் 1 போதுமே! மெலிந்து போன முடியை கூட ஒரே நாளில் கருகருவென அடர்த்தியாக மாற்றும்!

பயன்கள் :

பப்பாளி பழத்தில் காணப்படும் நொதிகள் சரும வளர்ச்சிக்கும், முகத்தில் உள்ள நுண் துளைகளில் படியும் அழுக்குகளை நீக்கி பொலிவான சருமத்தை தரும். ஆரஞ்சு பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது முகப்பரு , அதிகப்படியான எண்ணெய் பசையினை போக்க உதவுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த தேன், மிருதுவான மற்றும் மென்மையான சருமம் பெற உதவுகிறது. எனவே, இந்த தேனினை சருமத்திற்கு பயன்படுத்துவதால், இளமையாக தோற்றலாம். மேலும், இந்த பேஸ் பேக் சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. மேலும் இவை முகத்தில் காணப்படும் சுருக்கங்களை போக்கி இளமையான தோற்றத்தை பெற உதவுகிறது.


 

click me!