முகத்தை எப்போதும் ஃபிரெஷா, க்ளியர் ஸ்கின்னாக வச்சுக்க தினமும் இதை செய்யுங்க!

By Asianet Tamil  |  First Published Mar 24, 2023, 3:22 PM IST

முகத்தை அழகாக, மாசற்ற, பளிங்கு போன்று பளபளப்பாக வைத்துக் கொள்ள தினமும் என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளாலாம்.


முகத்தை எப்போதும் ஃபிரெஷாகவும்,  கண்ணாடி போல் பளபளன்னு மேனி பெற வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் எப்போதும் தங்களது முகத்தை வசீகரத்தோடும், அழகாகவும் வைத்துக் கொள்ள பல்வேறு விதமான முயற்சி செய்வார்கள்.

மேலும் ஒரு சில பெண்கள் அழகான,வெண்மையான சருமம் கிடைக்க தவம் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இனி தவம் எல்லாம் இருக்க வேண்டியதில்லைங்க! கொஞ்சம் நேரம் ஸ்பென்ட் செய்தால் போதும் , அழகான தோற்றத்தை பெறலாம். முகத்தை அழகாக, மாசற்ற, பளிங்கு போன்று பளபளப்பாக வைத்துக் கொள்ள தினமும் என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளாலாம்.

கிளென்சிங்:

கிளென்சிங் எனில் சுத்தம் செய்வதென்ற அர்த்தம். முகத்தில் இருக்கும் டஸ்ட்களை நீக்க இதனை செய்தல் அவசியமாகும். மேக் அப் போட்டு இருந்தாலும் அல்லது வெளியில் சென்று விட்டு வந்தாலும் சருமத்தில் தூசு, புகை, சுற்றுப்புற மாசு போன்றவையே நீக்க கிளென்சிங் தான் சிறந்த வமுறை.

ஃபேஸ் வாஷ் அல்லது ஜெல் போன்றவையே பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ரசாயனம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் நேச்சுரல் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம். இதனை செய்வதால் சருமத்தில் இருக்கும் துளைகள் திறந்து அதிலுள்ள டஸ்ட்கள் நீக்கப்படும்.

டோனிங்:

கிளென்சிங் செய்த பிறகு டோனிங், செய்தல் அவசியம். ஆனால் பலரும் இதனை செய்ய தவற விடுவர். கிளென்சிங் செய்வத்தல் திறக்கப்படும் துளைகள், டோனிங் செய்யும் பொழுது துளைகளானது மூடப்படும். சந்தையில் கிடைக்கும் தரமான டோனரை பயன்படுத்தி வரலாம். சிறிது டோனரை பஞ்சில் டிப் செய்து முகத்தில் ஒத்தி எடுக்கலாம்

வீட்டிலேயே ரோஜா இதழ்களை வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு 2 மணி நேரம் ஊற வைத்து பின் வடிகட்டி அதனை பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி உபயோகப்படுத்தலாம். க்ரீன் டீ, வெள்ளரிக்காய் ஜூஸ் போன்றவைகளையும் டோனராக உபயோகிக்கலாம்.

மாய்ஸ்சரைசிங்:

உங்கள் சருமத்துக்கு ஏற்றவாறு மாய்ஸ்சரைசர்களை தேர்வு செய்து வாங்கி உபயோகிக்க வேண்டும் . ட்ரய் ஸ்கின் (உலர்ந்த சருமம்) பெற்றவர்கள் கிரீம் டைப்பும், ஆயில் ஸ்கின் பெற்றவர்கள் ஜெல் டைப் மாய்ஸ்சரையும் உபயோகிக்கலாம். நார்மல் ஸ்கின் பெற்றவர்கள் காம்பினேஷன் ஸ்கின் என போடப்பட்டிருக்கும் மாய்ஸ்சரைசர் வாங்கி பயன்படுத்தலாம்.

இந்த மூன்றையும் தினமும் வெளியில் சென்று வந்த பிறகு, அல்லது இரவு தூங்க செல்வதற்கு முன்பு செய்து கொள்வதால் நல்ல மாற்றத்தை உணரலாம்.
 

ஒரு முறை இட்லி,தோசைக்கு செட்டிநாடு ஸ்டைலில் காரசாரமான பச்சை மிளகாய் சட்னி செய்து அசத்துங்க!

Tap to resize

Latest Videos

வாரத்தில் 2 முறை செய்ய வேண்டிய ஸ்கின் கேர்:

ஸ்கரப்:

கிளென்சிங் செய்த பின் ஸ்கரப் செய்வது நல்லது. ஸ்கரப்பராக இருக்கும் தோசை மாவு, இட்லி மாவு , கடலை மாவு , பயத்தம் மாவு போன்றவை எடுத்து சிறிது தண்ணீர் விட்டு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும்.

ஃபேஸ் மாஸ்க் அல்லது ஃபேஸ் பேக்

இயற்கை முறையில் ஃபேஸ் பேக் போட நினைத்தால் கடலைமாவு , தேன்,ஏதாவது ஒரு பழம் (வாழைப்பழம்,பப்பாளி பழம் ,ஸ்ட்ராபெர்ரி) ஆகியவற்றை சேர்த்து முகத்தில் ஃபேஸ் பேக் போன்று அப்பளை செய்து சிறிது நேரத்தில் உலர்ந்த பின் முகத்தை தண்ணீரில் அலசலாம். கடலை மாவு இல்லையெனில் அல்லது மாற்றாக வேறு ஏதேனும் சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் முல்தானிமிட்டி, சந்தனம் , தயிர் கலந்து முகத்தில் தடவலாம்.

முதல் மூன்றை தினமும், ஸ்க்ரப்பிங் அண்ட் ஃபேஸ் பேக்கினை மாதத்தில் 2 முறையென்று தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகம் ஜொலிஜொலிக்கும். இவைகளை முறையாக செய்து வந்தாலே உங்கள் சருமமும் பளபளவென்று அழகாகவும், வெண்மையாகவும் மாறும்.

click me!