முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீங்க வேண்டுமா? வீட்டு கிட்சனில் இருக்கும் பொருட்களை இப்படி யூஸ் பண்ணுங்க!

By Asianet Tamil  |  First Published Mar 19, 2023, 11:52 AM IST

முகத்தில் இருக்கும் சிறிய துளைகள் மூலமாக அழுக்குகள், வியர்வை, எண்ணெய் பிசுபிசுப்பு போன்றவை நுழைவதால் முகத்தில் கரும் புள்ளிகள், பருக்கள் போன்றவை ஏற்படுகின்றன.இவைகளை சரி செய்வது எப்படி? எந்தெந்த பொருட்களை எப்படி பயன்படுத்தி இவைகளை நீக்குவது? போன்றவையை இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


பலருக்கும் முகத்தில் அழகை கெடுக்கும் விதத்தில் சில கரும்புள்ளிகள் காணப்படும். அதை விரல்களை வைத்து நோண்டி அல்லது கிள்ளி விட்டால் மற்ற பகுதிகளிலும் பரவ தொடங்கும்.

முகத்தில் இருக்கும் சிறிய துளைகள் மூலமாக அழுக்குகள், வியர்வை, எண்ணெய் பிசுபிசுப்பு போன்றவை நுழைவதால் முகத்தில் கரும் புள்ளிகள், பருக்கள் போன்றவை ஏற்படுகின்றன.கரும்புள்ளிகள் இந்த துளைகளின் இடையில் சிக்கும் போது அவை தோலின் உட்பகுதிகளுக்கும் சென்று விடுகிறது.

இவைகளை நீக்க நமது வீட்டின் கிட்சனில் இருக்கும் பொருட்களை கொண்டு மிக சுலபமாக இரண்டே வாரங்களில் சரி செய்வது எப்படி? எந்தெந்த பொருட்களை எப்படி பயன்படுத்தி இவைகளை நீக்குவது? போன்றவையை இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கஸ்தூரி மஞ்சள்:

ஒரு சின்ன பௌலில் எ ஸ்பூன் அளவில் மஞ்சள் ,1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு பேஸ்ட் போன்று செய்து அதனை முகம் முழுவதும் தடவி சுமார் 15 நிமிடங்கள் வரை வைத்து உலரவிட்டு பின் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.

ஜெலட்டின் மற்றும் பால்:

ஒரு சின்ன பௌலில் ஜெலட்டின் 1 ஸ்பூன், பால் 2 ஸ்பூன், லெமன் ஜூஸ் 1/2 ஸ்பூன் ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதன் மேல் இந்த கலவை உள்ள பௌல் வைத்து (double boiling method) சூடாக்க வேண்டும்.

கலவை நன்கு கலந்த பின்னர் அதனை ஒரு ப்ரஷ் வைத்து முகத்தில் தடவி விட வேண்டும். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு அது நன்கு காய்ந்த பின் தோல் போன்று எடுத்து விட வேண்டும். இது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்குவதோடு, தேவையற்ற முடிகளையும் சேர்த்து நீக்கி விடும்.

வெள்ளிக்கிழமை மாரியம்மன் கோவிலில் இதனை தானமாக கொடுங்கள்! குழப்பமில்லாத ,தெளிவான மனம் கிடைக்கும்.

சமையல் சோடா மற்றும் எலுமிச்சை மாஸ்க்:

ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் அளவில் பேக்கிங் சோடாவும் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி காய்ந்த பின் காட்டன் வைத்து தண்ணீரில் டிப் செய்து முகத்தை கிளீன் செய்ய வேண்டும்.

முட்டை வெள்ளை மாஸ்க்:

முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதில் சிறுது லெமன் ஜூஸ் சேர்த்து மிக்ஸ் செய்து கொண்டு அதனை 2 முறை முகத்தில் அப்பளை செய்து காய விட்டு பின் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை அலச வேண்டும்.

சர்க்கரை மற்றும் தேன்:

பிரவுன் சர்க்கரை 1 ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதில் 2 ஸ்பூன் லெமன் ஜூஸ்ம் 1 ஸ்பூன் தேனும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொண்டு முகத்தில் அப்பளை செய்து சுமார் ஐந்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்த பிறகு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.

ஓட்ஸ் ஸ்க்ரப் :

ஒரு சின்ன கிண்ணத்தில் 2 ஸ்பூன் ஓட்ஸ்ஸும், 3 ஸ்பூன் தயிரும், 1/2 ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து, நன்றாக மிக்ஸ் செய்து அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை காய வைத்து விட்டு, பின் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

Tap to resize

Latest Videos

இவைகளை ஏதாவது ஒன்றை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து  வந்தால் நல்ல ரிசல்ட் விரைவில் கிடைக்கும். 

click me!