உதடு வெடிப்பு பிரச்னைக்கு தீர்வை தரும் 4 வழிகள்..!!

By Asianet TamilFirst Published Feb 19, 2023, 6:54 PM IST
Highlights

உதடுகளின் தோல் மற்ற சருமத்தை விட மெல்லியதாக இருக்கும். எனவே உதடு பராமரிப்பு மிகவும் முக்கியமானது. அதுபோல, உதடுகளின் இயற்கை அழகை பராமரிக்க வீட்டு வைத்திய முறைகள் நல்ல பலன்களை தரும். 
 

பலருக்கும் உதடுகள் வறட்சி அடையும் பிரச்னை உண்டு. அதுவும் பனிக் காலங்களில் நிறைய பேருக்கு இதனால் தொல்லை வரும். ஒருசிலருக்கு ஆண்டுதோறும் இதுவே தலையாய பிரச்னையாக இருக்கும். குறிப்பிட்ட வைட்டமின் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் போது, இதுபோன்ற உதடு வறண்டு போகும் பிரச்னை நேருவதாக மருத்துவ ஆதாரங்கள் கூறுகின்றன. இதை வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எளிதாக தீர்க்க முடியும். அதுதொடர்பான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயை உதட்டில் தடவி மசாஜ் செய்வதால், ஒருவேளை உதடுகளின் வறட்சி மற்றும் வெடிப்பு இருந்தால் நீங்கிவிடும். அதை தொடர்ந்து செய்து தர வேண்டும். குறைந்தது ஒரு மாதம் வரை செய்தால் மட்டுமே, பலன் கிடைக்கும்.

அலோ வேரா ஜெல்

உங்கள் உதடுகளில் கற்றாழை ஜெல்லை தடவுவது அல்லது தேங்காய் எண்ணெயுடன் கற்றாழை ஜெல்லை கலந்து உதடுகளில் தடவுவது உலர்ந்த உதடுகளைப் போக்க உதவும். ஒருவேளை உங்களுக்கு கற்றாழை மீது அலர்ஜி இருந்தால், மருத்துவரை அணுகிவிட்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுங்கள்.

தேன்

வறண்ட உதடுகளைத் தடுக்க தேனைப் பயன்படுத்துவதும் நல்லது. இதற்கு தேனை நேரடியாக உதடுகளில் தடவி மசாஜ் செய்யலாம். இது உதடுகளை மென்மையாக்க உதவும். ஆனால் ஆண்கள் அதை செய்யும் போது, தாடி அல்லது மீசையில் படாது பார்த்துக்கொள்ள வேண்டும்.

கன்னித்தன்மை இழந்தவுடன் உடல் சந்திக்கும் மாற்றங்கள் இவைதான்..!!

வெண்ணெய்

ஷியா வெண்ணெய் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இவற்றை தடவினால் உதடுகளின் வறட்சி நீங்கும். பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்துவது உலர்ந்த உதடுகளுக்கும் நன்மை பயக்கும். எனவே வறண்டு உதடு சார்ந்த பிரச்னை கொண்டவர்கள் தாராளமாக பெட்ரோலியம் ஜெல்லை பயன்படுத்தலாம்.

அவகேடோ வெண்ணெய்

பலரும் அறிந்திராத தகவலாக இது இருக்கும். உடலுக்கு பல்வேறு சத்துக்களை வழங்கும் அவகேடோவில் இருந்து வெண்ணெய்யும் தயாரிக்கப்படுகிறது. இதை வீட்டிலும் செய்யலாம், கடைகளிலும் வாங்கலாம். இக்குறிப்பிட்ட வெண்ணெய் தடவுவது உதடுகளின் வறட்சி மற்றும் வெடிப்பைத் தடுக்க உதவும்.
 

click me!