Gym Training: ஜிம் பயிற்சியை திடீரென நிறுத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா?

By Asianet TamilFirst Published Feb 15, 2023, 8:10 PM IST
Highlights

பாதியிலேயே ஜிம்மிற்கு செல்வதை நிறுத்தி விட்டால், அது உங்களுக்கு சில பாதிப்புகளை உண்டாக்கும். அவ்வாறு ஜிம்மிற்கு செல்வதை இடையில் நிறுத்தி விட்டால் என்ன நடக்கும் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். உடல் எடையை அதிகரிக்கவும், குறைக்கவும் பலரும் உடற்பயிற்சி மேற்கொள்ள ஜிம்மிற்கு செல்கிறார்கள். ஆனால் அதனைத் தொடர்ந்து செய்வார்களா என்பது இப்போது கேள்விக்குறியாகி உள்ளது. ஆமாம், பலரும் ஜிம்மிற்கு சில மாதங்கள் செல்கிறார்களே தவிர, தொடர்ந்து செல்வதில்லை. இப்படி பாதியிலேயே ஜிம்மிற்கு செல்வதை நிறுத்தி விட்டால், அது உங்களுக்கு சில பாதிப்புகளை உண்டாக்கும். அவ்வாறு ஜிம்மிற்கு செல்வதை இடையில் நிறுத்தி விட்டால் என்ன நடக்கும் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

ஜிம்மிற்கு செல்வதை நிறுத்துதல்

சில மாதங்களுக்கு ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்ததும், உங்களது தசைகள் சற்று இறுகி வலுவாகி இருக்கும். அச்சமயத்தில் நீங்கள் திடீரென்று ஜிம் பயிற்சியை நிறுத்தி விட்டால் தசை வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுதவிர, இறுக்கமான தசைகள் படிப்படியாக தளர்ந்து, அதன் வலுவை இழக்க நேரிடும். ஜிம் பயிற்சியின் போது, உங்கள் உடலில் இருந்து அதிகளவிலான வியர்வை வெளியேறும். அதுவே, ஜிம் பயிற்சியை நிறுத்தி விட்டால், உடலில் இருந்து வெளியேறும் வியர்வையும் குறைந்து விடும்.

மன மகிழ்ச்சி குறையும்

நீங்கள் சாப்பிடும் கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் அடிவயிறு மற்றும் தொடை தசைகளின் கீழ் கொழுப்பை சேகரித்து நாளடைவில் தொப்பையை வரவழைத்து விடும். ஜிம் பயிற்சியில் ஈடுபடும் சமயத்தில், அதிகளவில் எண்டோர்ஃபைன், செராடினான் மற்றும் டோபோமைன் போன்ற ஹார்மோன்கள் சுரக்கும். இதனால் உங்களது அன்றைய நாள் மிகவும் புத்துணர்ச்சியுடன் தொட்ங்கும். திடீரென்று ஜிம் பயிற்சியை நிறுத்தி விட்டால், உங்களின் மன மகிழ்ச்சியின் அளவு குறைந்து விடும்.

Cracked feet: பாத வெடிப்பை சரிசெய்யும் கருப்பு உப்பு: எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

ஹார்மோன் சுரப்பில் பாதிப்பு

அதிக வேலையின்றி இருந்த தசைகளுக்கு, ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து வந்தால் வேலைபளு அதிகரிக்கும். திடீரென உடற்பயிற்சியை நிறுத்தியவுடன் தசைகளுக்கு மீண்டும் வேலையில்லாமல் போவதால், தசைகள் பாதிக்கப்படும். இதில் ஒரு சிலருக்கு, ஜிம் பயிற்சியை நிறுத்திய உடன், உடல் எடையானது திடீரென அதிகரிக்கும். இதனால், உடல்  பருமன் அதிகரித்து ஹார்மோன் சுரப்பு அளவுகளில் மாற்றம் ஏற்படும். ஆகவே, ஜிம் பயிற்சியை உடனே நிறுத்தி விட வேண்டாம். ஒருவேளை, ஜிம் பயிற்சியை நிறுத்த முடிவு செய்தால், அதனை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்த முயற்சி செய்யுங்கள். அதுவே மிகவும் நல்லது. மேலும், இப்படிச் செய்வதால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.

 

click me!