முகத்தைப் பருக்கள் வடுக்கள் இல்லாமல் பொலிவாக வைக்க வெட்டிவேர் 1 போதும்! முகப்பருவின் தடம் தெரியாமல் மறையும்..!

By Ma RiyaFirst Published Mar 30, 2023, 6:43 PM IST
Highlights

சரும பராமரிப்பில் உதவும் மூலிகைகளில் வெட்டி வேரும் ஒன்று. இந்த வேரில் குளிரூட்டும் தன்மை அதிகம் உள்ளது. தோலில் ஏற்படும் அழற்சி, பருக்களை போக்குவது வெட்டிவேர். இது சருமத்தில் ஏற்படுத்தும் மாயங்களை இந்த பதிவில் காணலாம். 

சரும பராமரிப்பில் உதவும் மூலிகைகளில் வெட்டி வேரும் ஒன்று. இந்த வேரில் குளிரூட்டும் தன்மை அதிகம் உள்ளது. தோலில் ஏற்படும் அழற்சி, பருக்களை போக்குவது வெட்டிவேர். இது சருமத்தில் ஏற்படுத்தும் மாயங்களை இந்த பதிவில் காணலாம். 

வெட்டிவேர் அல்லது வெட்டிவேர் எண்ணெய் உபயோகம் செய்வது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பரு, தழும்புகளை நீக்கி சருமத்தை ஜொலிக்க வைக்கும். வெட்டிவேரில் உள்ள அழற்சி பண்புகள் சருமத்தின் நுண்துளைகளில் உள்ள பாக்டீரியாவை பெருகவிடாமல் தடுக்கும். இந்த வேரில் உள்ள ஆல்கலாய்டுகள், ஃப்ளவனாய்டுகள், டானின்கள், சபோனின்கள், பீனால்கள் தோலில் சுருக்கம் இல்லாமல் இளமையாக வைத்திருக்கும். இந்த வெட்டி வேரை எப்படி பயன்படித்தினால் முகத்தை பளபளப்பாக வைத்திருக்கும் என்பதை இங்கு காணலாம். 

வசீகரமான முகம்! 

வெட்டி வேரை பொடி செய்து அதனை தண்ணீர் கலந்து பேஸ்ட் மாதிரி செய்து முகத்தில் பூசி கொள்ளுங்கள். இதனை 15 நிமிடங்கள் அப்படி காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவி கொள்ளுங்கள். சுத்தமான துண்டால் முகத்தை துடைத்து கொள்ளுங்கள். 2 நாள்கள் இதை செய்து பாருங்கள். முகம் அப்படியொரு வசீகரத்தை பெறும். 

இதையும் படிங்க: samantha : சமந்தா பகிர்ந்த 'மயோசிடிஸ்' நோயின் பயங்கரமான அறிகுறிகள்.. 8 மாசமா இவ்வளவு கஷ்டபடுகிறாரா?

வடுக்கள் மறையும்! 

வெட்டி வேர் (vettiver) எண்ணெய்யை தொடர்ந்து வடுக்கள் மீது பூசி வந்தால் அவை மறைந்து பழைய தோற்றம் வரும். இந்த எண்ணெய்யை தேய்த்து குளிக்கலாம். 

பொலிவான சருமம்! 

வெட்டி வேர் வாங்கி கொள்ளுங்கள். அதனுடன் ரோஜா மொட்டுக்கள், மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதைகள் ஆகியவற்றை சரிசமமாக போட்டு, இந்த பொருள்களை மில்லில் கொடுத்து பொடியாக அரைத்து வாங்கி கொள்ளுங்கள். இந்த பொடியை தண்ணீரில் குழைத்து முகத்தில் தடவி பேஸ் பேக் மாதிரி கொள்ளுங்கள். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் பொலிவான சருமத்தை பெறலாம். 

பருக்களின் வடுக்கள் மறைய..! 

வெட்டிவேரை சின்ன துண்டுகளாக வெட்டி, ஒரு தேக்கரண்டி அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். கொட்டை நீக்கிய கடுக்காயை அதனுடன் சேர்த்து இரவு வெந்நீரில் ஊற வைத்து விடுங்கள். இவை நன்கு ஊறியிருக்கும். காலையில் அதை எடுத்து அரைத்து பருக்கள் மீது பூசுங்கள். இதனை வாரம் 4 நாள்கள் 1 நாள் விட்டு 1 நாள் என்ற கணக்கில் பூசி வந்தால் பருக்கள் மறையும். வடுக்களும் நீங்கும். 

இதையும் படிங்க: கிட்னி பெயிலியர் ஆனவங்களுக்கு புது சிறுநீரகத்தை வைத்த பிறகு, அவங்க பழைய சிறுநீரகத்தை என்ன செய்வார்கள் தெரியுமா

click me!