தலைமுடி உதிராமல் அழகான ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கு அழகுக்கலை நிபுணர்கள் கூறியுள்ள டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.
மன அழுத்தம் இருந்தால் முடி உதிர்வு இருக்கும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சத்தான உணவுகள் சாப்பிடாவிட்டாலும் முடி உதிரும். தூய்மையான தேங்காய் எண்ணெய்யை தலைக்கு தேய்க்க வேண்டும். வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் உடன் வெந்தயம், கருஞ்சீரகம், மருதாணி இலை, கருவேப்பிலை இலை, கரிசலாங்கண்ணி இலை, செம்பருத்தி இலை கலந்து காய்ச்சி ஆறவைத்து தலைக்கு பூசி வரலாம். முடி உதிர்வு பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும்.
Monsoon Hair Care Tips : மழைக்காலத்தில் கூந்தலை இப்படி கேர் பண்ணுங்க.. முடி உதிர்வே இருக்காது!
undefined
செம்பருத்தி செடி இலையை ஷாம்பு போல பயன்படுத்தலாம். செம்பருத்திப்பூக்களை சீகைக்காய்ப் பொடியுடன் சேர்த்துப் பயன்படுத்தினால் பொடுகு, முடி உதிர்தல், இளநரை பிரச்னைகள் சரியாகும். செம்பருத்திப்பூக்களை நிழலில் உலர்த்தி ஆவாரம்பூ, பாசிப்பயறு, கறிவேப்பிலை சேர்த்துப் பொடியாக்கி சோப்புக்குப் பதிலாக தலை முதல் கால் வரை பூசிக் குளிக்கலாம்.
நரைமுடி, பொடுகுத்தொல்லை, முடி உதிர்தல் பிரச்னைகள் தீர செம்பருத்திப்பூக்கள், செம்பருத்தி இலைகள், கறிவேப்பிலை, மருதாணி இலை ஆகியவற்றை அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து குளிக்கலாம். வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை இதுமாதிரி குளிக்கலாம்.
முடி உதிர்வை தடுக்க.. ஒரு வாரத்தில் தலைமுடிக்கு எத்தனை முறை எண்ணெய் தேய்க்க வேண்டும் தெரியுமா?
ஷாம்பு அலர்ஜி இருப்பவர்கள் செம்பருத்தியை பயன்படுத்தலாம். செம்பருத்தி இலையை தனியாக அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று இருக்கும். இது கண்ணுக்கும் உடலுக்கும் குளிர்ச்சியை தரும்.
கருவேப்பிலை, கரிசலாங்கண்ணியை தேங்காய் எண்ணெய் உடன் கலந்து காய்ச்சி ஆற வைத்து தலையில் தேய்த்து வர வேண்டும். முடியின் வேர் உறுதியாகும், முடி உதிர்வது குறையும்.