
தளர்வான மார்பகங்களை இறுக்கமாக எடுப்பான தோற்றத்திற்கு கொண்டு வர இயற்கையான வீட்டு சிகிச்சை முறைகள் குறித்து பார்க்கலாம்.
மார்பகங்கள் தளர்வடைய காரணம்
பிரசவத்திற்குப் பிறகு ஓராண்டு காலம் பெண்கள் தாய்பால் கொடுப்பார்கள். பிரசவத்துக்கு பின் குழந்தைகளுக்கான மார்பகங்களில் பால் சுரக்கும். அப்போது மார்பகங்கள் பெரிதாகின்றன. தாய்ப்பால் தருவதை நிறுத்திய பிறகு, பால் சுரப்பது நிற்கும். இப்போதும் மார்பகங்கள் தளர்வடையும். பெண்கள் தங்களின் உடல் நிலை பற்றியும் அழகை பற்றியும் அக்கறை காட்டமாட்டார்கள். இதன் காரணமாக மார்பகங்கள் தளர்ந்து விடும். சில பெண்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க மார்பகங்கள் தளர்வடைந்து விடும்
ஐஸ் கட்டி மசாஜ்
பெரிய மற்றும் எடுப்பான மார்பகங்களுக்குப் பதிலாக தொங்கிய நிலையில் இருக்கும் மார்பகங்களை கொண்டிருப்பது எந்த பெண்ணுக்கும் பிடிக்காத விஷயம் தான். மார்பகங்களை எடுப்பான தோற்றத்திற்கு மாற்ற ஐஸ் கட்டி உதவும். ப்ரீசரில் எப்போது ஐஸ் கட்டிகளை வைத்திருங்கள். சில ஐஸ் கட்டிகளை எடுத்து உங்கள் மார்பைச் சுற்றி 2 நிமிடங்கள் வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். ஐஸ் கட்டிகளைக் கொண்டு மார்பகங்களுக்கு மசாஜ் செய்வது உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். இது அந்த பகுதியில் உள்ள தசைகளை இறுக்கும்.
கிராம்பு நீரால் இத்தனை பயன்களா? பல நோய்களுக்கும் தீர்வு!
எண்ணெய் மசாஜ்
மசாஜ் ஒரு பெண்ணின் மார்பகங்கள் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் மாறவும் மற்றும் அவரது உடலில் ஹார்மோன்களின் சமநிலையை பராமரிக்கவும் உதவும். அவ்வப்போது உங்கள் கைகளால் பாதுகாப்பாக மசாஜ் செய்வது நல்லது. தேங்காய் எண்ணெய் அல்லது பாதம் எண்ணெயை சில துளிகள் கைகளில் எடுத்துக்கொண்டு மென்மையாக மேல்நோக்கி இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் மார்பகங்களில் குறைந்தது 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் காயமடைந்த செல்களை மீட்டெடுக்க உதவும். இந்த சிகிச்சையானது ஒவ்வொரு வாரமும் குறைந்தது நான்கு முதல் ஐந்து முறை செய்ய வேண்டும்.
வெந்தைய பேஸ்ட்
தளர்வான மார்பகங்களை இறுக்கமாக்க வெந்தயம் ஒரு சிறப்பான மருத்தாகும். வெந்தய பேஸ்ட் மார்பக தோலை இறுக்கி வலிமையாக்குகிறது. 2 டீஸ்பூன் வெந்தயத்தை எடுத்து இரவு முழுவதும் தண்ணீருடன் சேர்த்து ஊறவைக்க வேண்டும். காலையில் வெந்தயத்தை அரைத்து கெட்டியான பேஸ்ட் போல உருவாக்கவும். இந்த பேஸ்டை உங்கள் மார்பகங்களில் தடவி 15 நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும். பின்னர் அதனை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதேபோல் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தினால் தளர்ந்து போன மார்பகங்கள் எடுப்பான தோற்றத்தை பெறும்.
உடற்பயிற்சி
கைகளை மேலே தூக்கி உடற்பயிற்சி செய்வதன் மூலம் தொய்வடைந்த மார்பகங்கள் எடுப்பாக மாறும். தண்ணீரில் நீச்சலடிப்பது உங்கள் மார்பகங்களை உறுதியாக்க உதவுகிறது. கைகளை தலைக்கு மேலாக உயர்த்தி நீச்சலடிக்கும் இந்த இயற்கையான செயல்பாடு மார்பக தசைகளை உறுதியாக்கும். நீச்சல் அடிக்க முடியாதவர்கள் கைகளை மேலே தூக்கி இறக்கி உடற்பயிற்சி செய்யலாம். இது சாதாரண டிப்ஸ்தான். மருத்துவ ஆலோசனை பெற்று மார்பக தளர்விற்கு சிகிச்சை பெறலாம்.
சுண்டி இழுக்கும் காந்த கண்கள் வேண்டுமா?.. கருவளையம் போக இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க