சுண்டி இழுக்கும் காந்த கண்கள் வேண்டுமா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

By Asianet Tamil  |  First Published Jul 29, 2024, 1:17 PM IST

கண்களை சுற்றி உள்ள கருவளையம் நீங்கி காந்த கண்களைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாம். 


கருவளையம்
கண்கள் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்று. இதை நன்றாக பாதுக்காக்க வேண்டும். கணினியில் பணிபுரிவது, புத்தகம் வாசிப்பது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என்று கண்களின் வேலை அதிகம். இதனால் கண்களுக்கு  சோர்வு ஏற்படுகிறது. இதனால், கண்களுக்கு கீழே கருவளையமும், நாளடைவில் சுருக்கமும் ஏற்படுகிறது. தினமும் 10 நிமிடங்கள் கண்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். 

ஆரஞ்ச் பழம்
ஆரஞ்சுப் பழம் தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி கண்களை பிரகாசிக்க வைக்கும். சிறிதளவு ஆரஞ்சு ஜூஸை ஃப்ரீசரில் வைத்து, அது ஐஸ் கட்டியான பின்னர் மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுக்க வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால், கண்கள் பளிச்சென ஆகிவிடும். 

Beauty Tips: அழகான முகத்தில் ஆங்காங்கே கரும்புள்ளிகள்; கவலையை விடுங்க; சிம்பிள் பியூட்டி டிப்ஸ் இதோ!!

கண்களுக்கு புத்துணர்ச்சி
வீட்டை விட்டு வெளியே சென்று வந்தாலே கண்கள் சோர்வு அடைந்துவிடும். சிறிதளவு பன்னீரில் பஞ்சை நனைத்துக் கண்கள் மீது வைத்து ஒத்தி  எடுக்க வேண்டும். பின்னர் கண்களை மூடியபடி பத்து நிமிடங்கள் இருக்க வேண்டும். இப்படி செய்தால் கண்கள் புத்துயிர் பெறும். 

கறிவேப்பிலை சாறு
கறிவேப்பிலையை இடித்து சாறு பிழிந்து, வெண்ணெயுடன் கலந்து கண்களைச் சுற்றி பூசினால் கருவளையம் விரைவில் மறையும்.  வெள்ளரிக்காயை துருவி மெல்லிய துணியில் கட்டி, கண்களை மூடிக்கொண்டு மேலே வைத்தால் கண்கள் புத்துணர்ச்சி பெறும்.

Tap to resize

Latest Videos

undefined

Beauty Tips: அழகான செதுக்கியது போல கூர்மையான தாடை வேணுமா? சிம்பிள் டிப்ஸ்!!

கவர்ச்சியான கண்களுக்கு

கண்கள் கவர்ச்சியாக தெரிய வேண்டுனாமால், ஆடைகளுக்கு ஏற்ற நிறத்தில் ஐ ஷேடோ பயன்படுத்தவும். பெரிய கண்கள் உடையவர்கள் டார்க் கலரில் ஐ ஷேடோ போடக் கூடாது. கண்கள் சிறியதாக தெரியும். ஐ லைனர் பயன்படுத்தினால் சிறிய கண்கள் உள்ளவர்கள் மஸ்காரா போட்டால், கண்கள் பெரிதாக, அழகாக இருக்கும். 

click me!