Beauty Tips for Men : ஆண்கள் தங்கள் அழகை பாதுகாக்க நாங்கள் கொடுத்துள்ள இந்த குறிப்புகள் நிச்சயம் அவர்களுக்கு உதவும்.
ஹேண்ட்ஸ்சமாக ஜொலிக்க ஆண்கள் இந்த 5 விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அது என்னென்ன என்று தான் பார்க்க போகிறோம்.
தூக்கத்தை தொலைக்கும் ஆண்கள்
undefined
பெரும்பாலான ஆண்கள், பதின்பருவத்தினர் தூக்கம் தொலைக்கின்றனர். இரவு நேரங்களில் அதிகம் செல்போன் பார்ப்பதால் முகம் கருமையாக காணப்படும். கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றி முகத்தின் அழகை கெடுத்து விடும். எனவே தினசரி இரவு குறைந்தது 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை உறங்க வேண்டும். தூங்கும் போதுதான் சருமம் தன்னை புதுப்பித்துகொள்கிறது.
பளபளப்பான சருமம்
நன்றாக உறங்கினால் சருமத்துக்கு தேவையான அளவிற்கு கொலாஜன் உற்பத்தி உடம்பில் அதிகரிக்கும். கொலாஜன் உற்பத்தி சீராக இருந்தால் சருமம் சுருக்கம் விழாமல் பளபளப்பாக இருக்கும். சருமத்திற்கு தேவையான ரத்த ஓட்டம் அதிகரிக்க சீரான உறக்கம் அவசியம். சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுந்திருப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
பிரசவ கால தழும்புகள்; வயிற்றில் வரிக்குதிரை பதற்றம் வேண்டாம்; ஈஸியாக போக்கலாம்!!
கட்டுமஸ்தான உடல் அமைப்பு
உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமான உடலை பெற உதவும் என்றாலும் சருமத்தையும் பளபளப்பாக புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும். நன்றாக உறங்கி எழுந்து காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆண்கள் கட்டுமஸ்தான உடல் அமைப்போடு இருக்கும் போது அழகும் பளிச்சிடும் ஹேண்ட்ஸ்சம் லுக் கொடுக்கும்.
வைட்டமின் சத்துள்ள உணவுகள்
சருமத்தை பொலிவாக வைக்க வைட்டமின் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான உயிரணுக்களின் உற்பத்தியை வைட்டமின்கள் அதிகரிக்கும். இன்றைக்கு பலரையும் பாதிப்பது ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம்தான் கிடைத்ததை சாப்பிட்டு விட்டு உயிர் வாழ்கின்றனர். வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவதால் கண்கள் பொலிவடையும். சருமத்துக்கு நன்மை செய்யும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். ஜங்க் ஃபுட் சாப்பிடாதீர்கள். வைட்டமின் இ சத்து நிறைந்த உணவுகள் கண்களுக்கு கீழ் வரும் கருவளையத்தை நீக்கும்.
முகப்பரு நீங்கும்
எண்ணெயில் பொறித்த காரமான உணவுகள், அதிக இனிப்புகள் சருமத்தில் முகப்பருக்களை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட்ட பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் இனிப்புகளையும் கார உணவுகளையும் ஆண்கள் அவசியம் தவிர்க்க வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துகொண்டால் சருமம் பளபளப்பாக இருக்கும்.
தண்ணீரின் மகத்துவம்
நமது உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடித்தால்தான் உடலில் இருக்கும் நச்சுகள் வெளியேறும். இதனால் சருமம் பொலிவாக இருக்கும். ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் தண்ணீர் குடிக்க யோசிக்கின்றனர். இளம் பருவத்தினர் மட்டுமல்லாது பணிக்கு செல்லும் ஆண்கள் அதிகம் மிஸ் செய்வது தண்ணீர் குடிப்பதைத்தான். சோம்பேறித்தனம்தான். படிப்போ, வேலையே, விளையாட்டு பிள்ளைகளோ அதிலேயே மூழ்கிவிடக்கூடாது அவ்வப்போது தங்களின் உடலையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது 3 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும்
பொலிவான சருமம்
உடம்பையும் முகத்தையும், சருமத்தையும் ஆரோக்கியமாக பேணிக்காப்பதில் தண்ணீருக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. கம்யூட்டரில், செல்போனில் கேம் விளையாடும் அதே நேரத்தில் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும். பணியில் இருக்கும் ஆண்கள் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்க மறக்கக்கூடாது. வெளியில் சென்று வெயிலில் அலையும் ஆண்கள் தண்ணீர் அதிகமாகவே குடிக்கலாம் தவறில்லை. இது உடலின் நீர் சத்தினை சமநிலையில் வைத்திருக்கும். முகம் சோர்வடையாமல் பொலிவுடன் இருக்கும். வெயிலில் அதிகப்படியாக அலைபவர்கள், அதிகம் வியர்வையை கொண்டிருக்கும் ஆண்கள் இன்னும் கூடுதலாக தண்ணீர் குடிப்பது அவசியம். ஆண்கள் தங்கள் சருமத்துக்கு ஏற்ற அழகு சாதன பொருள்களை தேர்வு செய்வதற்கு முன்பு சரும பராமரிப்பு நிபுணர்களை ஆலோசிப்பது அவசியம்.
சுண்டி இழுக்கும் காந்த கண்கள் வேண்டுமா?.. கருவளையம் போக இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க