ராதிகாவின் 'கிழக்கு வாசல்' தொடரில் இருந்து அதிரடியாக தூக்கப்பட்ட சஞ்சீவ்..! அவருக்கு பதில் இனி இந்த பிரபலமா?

First Published | Apr 22, 2023, 2:14 PM IST

ராதிகா - எஸ்.ஏ.சி நடித்து வந்த 'கிழக்கு வாசல்' தொடரில், சஞ்சீவ் நடிக்க கமிட் ஆகி இருந்த நிலையில்... திடீர் என அந்த சீரியலை விட்டு அவர் வெளியேற்றப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 

நடிகை ராதிகா சன் டிவி தொலைக்காட்சியில் இதுவரை, அரசி, அண்ணாமலை, வாணி ராணி, உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருந்தாலும் , முதல் முறையாக விஜய் டிவி தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள, 'கிழக்கு வாசல்' என்கிற தொடரில் நடிக்க உள்ளார்.

இந்த சீரியலில் ராதிகாவுக்கு ஜோடியாக, பிரபல இயக்குனரும்... தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சி நடித்து வருகிறார். இந்த சீரியலில் 'பூவே பூச்சூடவா' சீரியல் மூலம் பிரபலமான ரேஷ்மா மற்றும் 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' தொடரில் நாயகியாக நடித்து வந்த அஸ்வினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். மேலும் ரேஷ்மாவுக்கு ஜோடியாக பிரபல நடிகர் சஞ்சீவ் நடிக்க இருந்தார்.

இது என்ன சிம்புவின் 'பத்து தல' படத்திற்கு வந்த சோதனை..! ரிலீசான ஒரே மாதத்தில் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Tap to resize

இவர் கடந்த 1989ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான பொன்மனச் செல்வன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவரின் சகோதரி நடிகை என்பதால், இந்த படத்தில் கிடைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து, விஜய்யுடன் இணைந்து சந்திரலேகா, நிலாவே வா, பத்ரி, புதிய கீதை போன்ற போன்ற படங்களில் குணசித்ர வேடத்தில் நடித்து பிரபலமானார்.
 

திரையுலகில் பட வாய்ப்பு கிடைக்காததால், சீரியல் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்கினார். மானாட மயிலாட நிகழ்ச்சியை, கிகியுடன் இணைந்து தொகுத்து வழங்கிய இவர், பின்னர் சன் டிவி சூப்பர் ஹிட் சீரியல்களான மெட்டி ஒலி, திருமதி செல்வம், போன்ற சீரியல்களில் நடித்தார்.

கர்நாடக பாடகி சுதா ரகுநாதனை சோகத்தில் ஆழ்த்திய மரணம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!
 

சமீபத்தில் விஜய் டிவி -யில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சஞ்சீவ், அவ்வப்போது தன்னுடைய நண்பர் விஜய் குறித்து பேசிய தகவல்கள் அதிகம் கவனம் பெற்றது. இந்நிலையில் விரைவில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள கிழக்கு வாசல் தொடரில் கமிட் ஆகி நடித்து வந்தார் சஞ்சீவ். 
 

ஆனால் திடீர் என சீரியலில் இருந்து இவரை நீக்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சஞ்சீவ் கூறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவலில், படப்பிடிப்பில் இணைந்து சில நாட்கள் நடித்தேன், ஆனால் இப்போது நான் அதில் இல்லை. நீங்க இந்த சீரியல் நடிக்கவில்லை என்று என்னிடம் கூறிவிட்டார்கள். இதற்கான காரணத்தை மீடியா முன்பு விளக்கமாக கூற முடியாது என தெரிவித்துள்ளதோடு, விரைவில் அடுத்த புரோஜெக்ட் மூலம் ரசிகர்களை சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.
அடடா... அழகு ராட்சசியே! 40 வயதிலும்... பிரெஷ் ரோஜா போல் ரெட் ட்ரெஸ்ஸில்... கேரள ரசிகர்களை அசர வைத்த குந்தவை!

சஞ்சீவ் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ள நிலையில், சஞ்ஜீவ்க்கு பதில்... இந்த தொடரில், பாண்டியன் ஸ்டார் சீரியல் ஜீவா நடிக்க கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. சஞ்சீவ்வை அதிரடியாக சீரியலில் இருந்து விளக்கி விட்டு மற்றொரு நடிகரை நடிக்க வைத்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

click me!