ஷாக்கிங் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து விலகிய கண்ணன்... இது தான் காரணமா? இனி இவர்தான் நடிக்க போறாராம்!

First Published | Apr 20, 2023, 7:11 PM IST

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து, கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரம், இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று 'பாண்டியன் ஸ்டோர்'. 4 அண்ணன் - தம்பிகள் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், எத்தனையோ பிரச்சனைகள் வந்தாலும் ஒன்றாக இருந்த அண்ணன் தம்பிகள், தற்போது ஆளுக்கு ஒரு திசையாக பிரிந்து சென்று விட்டனர்.

இந்நிலையில் முல்லையின் வளைகாப்பில் அண்ணன் - தம்பிகள் மீண்டும் ஒன்றிணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் கூட மூர்த்தி, கண்ணன், ஜீவா, என அனைவருமே ஒரே நிற சட்டையில்... முல்லையில் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த காட்சிகள் வெளியாகி இருந்தது. இதை பார்த்து ஒரு நிமிடம் ரசிகர்களே இது உண்மையா? என்பது போல் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இரண்டாம் திருமணம் செய்த ஹீரோவுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்..! அது இந்த படத்தின் இரண்டாம் பாகமா?

Tap to resize

காரணம் ஜீவா - மீனா இருவரும் , முல்லையின் வளைகாப்பு நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள நினைத்தாலும், அதனை எப்படியும் தடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறார் மீனாவின் தந்தை ஜனார்த்தனன். அதேபோல் ஐஸ்வர்யா மற்றும் கண்ணனும் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என்ன பிரச்சனை செய்வார்கள் என்கிற கண்ணோடத்தில் தான், தற்போது சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

மிகவும் பரபரப்பான கதைகளத்துடன் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சீரியலில் இருந்து, கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சரவண விக்ரம் விலகி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இவருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளதால், சீரியல் இங்கிருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜாக்கெட் போடாமல் சுந்தரி சீரியல் நடிகை கேபிரியல்லா நடத்திய போட்டோ ஷூட்..! விமர்சித்த நெட்டிசனுக்கு நச் பதிலடி!

இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக.. 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில்  கண்ணனுக்கு ஜோடியாக நடித்து வரும் ஐஸ்வர்யா, தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வரும் நவீன் வெற்றியுடன் இணைந்து... புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, விரைவில் யாரும் எதிர்பார்க்காத தகவல் வெளியாக உள்ளதாக கூறியுள்ளார். எனவே கண்ணனுக்கு பதிலாக நவீன் வெற்றி தான் மாறப் போகிறாரா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த தகவல் சரவண விக்ரமின் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

Latest Videos

click me!