பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா. தமிழ் புத்தாண்டு தினமான நேற்று ஒரு பதிவை போட்டிருந்தார். அந்த பதிவை பார்த்ததும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அது என்னவென்றால், தமிழ் புத்தாண்டன்று தான் புது கார் ஒன்றை வாங்கி உள்ளதாக கூறி அதன் புகைப்படங்களையும் ரச்சிதா பதிவிட்டு இருந்தார். அவருடன் பிக்பாஸ் ஷெரினும் உடன் சென்று இருந்தார்.