சன் டிவி சீரியல்கள் தான் வழக்கமாக டாப் 5 இடங்களை ஆக்கிரமித்து இருக்கும், ஆனால் இந்த வார டிஆர்பி ரேஸில் விஜய் டிவியின் மூன்று சீரியல்கள் டாப் 5-க்குள் நுழைந்து கெத்துகாட்டி உள்ளது.
புத்தாண்டு பிறந்த பின்னர் சின்னத்திரை சீரியல்களின் டிஆர்பி நிலவரம் எப்படி இருக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. கடந்த வாரம் பொங்கல் விடுமுறையால் டிஆர்பி நிலவரம் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில், இன்று இந்த ஆண்டு முதல் வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியாகி உள்ளது. வழக்கமாக சன் டிவி சீரியல்கள் தான் இந்த ரேஸில் டாப் 5 இடங்களை ஆக்கிரமித்து இருக்கும், ஆனால் இந்த வாரம் வெளியாகி உள்ள டிஆர்பி நிலவரப்படி, விஜய் டிவி சீரியல்கள் தான் முதல் ஐந்து இடங்களில் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது.
24
சரிவை சந்தித்த சன் டிவி சீரியல்கள்
விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் 10-ம் இடத்தில் நீடிக்கிறது. அதற்கு 6.42 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. அதேபோல் 9-வது இடத்தை அன்னம் சீரியல் தக்க வைத்து உள்ளது. அந்த சீரியலுக்கு 8.03 புள்ளிகள் கிடைத்துள்ளது. கடந்த வாரம் 8.65 புள்ளிகள் உடன் 5-ம் இடத்தில் இருந்த சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல், இந்த வாரம் மளமளவென பின்னுக்கு தள்ளப்பட்டு 8.15 புள்ளிகளுடன் 8-ம் இடத்தை பிடித்துள்ளது. கேப்ரியல்லா நடித்த மருமகள் சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் 7-வது இடத்தில் நீடிக்கிறது. அதற்கு 8.19 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.
34
டாப் 5-ல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
சன் டிவியின் கயல் சீரியல் கடந்த வாரம் 4-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் ஆறாம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அதற்கு 8.83 புள்ளிகள் கிடைத்துள்ளன. கடந்த வாரம் 8-வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் மளமளவென முன்னேறி ஐந்தாம் இடத்துக்கு தாவி இருக்கிறது. அதற்கு 8.90 புள்ளிகள் கிடைத்துள்ளன. பாண்டியன் குடும்பத்தை ஜெயிலுக்கு அனுப்பிய எபிசோடால் திடீரென பிக் அப் ஆகி டிஆர்பியிலும் அடிச்சு தூக்கி இருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்.
விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியல்களில் ஒன்றான அய்யனார் துணை இந்த வாரம் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 3ம் இடத்தில் இருந்த இந்த சீரியலை இந்த வாரம் நான்காம் இடத்துக்கு தள்ளிவிட்டு மூன்றாம் இடத்தை சிறகடிக்க ஆசை சீரியல் ஆக்கிரமித்திருக்கிறது. ரோகிணியை பற்றிய உண்மை வெளிவந்த எபிசோடால் சிறகடிக்க ஆசை சீரியல் 9.75 ரேட்டிங் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது. சிறகடிக்க ஆசை சீரியலை ஜஸ்ட் மிஸ்ஸில் முந்தி இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ளது மூன்று முடிச்சு சீரியல், அதற்கு 9.76 புள்ளிகளும், முதலிடத்தில் உள்ள சிங்கப்பெண்ணே சீரியலுக்கு 9.80 டிஆர்பி ரேட்டிங்கும் கிடைத்துள்ளது.