Sandy Latest Update: டான்ஸ்னா சும்மாவா? மாஸ்டர் சாண்டியுடன் களமிறங்கும் புதிய ஜோடிகள் - லேட்டஸ்ட் அப்டேட்!

Published : Jan 19, 2026, 01:02 PM IST

விஜய் டிவி தனது அடுத்த பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான 'ஜோடி ஆர் யூ ரெடி' சீசன் 3-ஐ அறிவித்துள்ளது. சாண்டி, ஸ்ரீதேவி விஜயகுமார், மற்றும் ரம்பா ஆகியோர் மீண்டும் இணையும் நிலையில், நிகழ்ச்சியின் முதல் புரொமோ வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
13
டான்ஸ் ஆட தயாராகுங்கள்.!

தமிழ் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களின் "கிங்" என்று அழைக்கப்படும் விஜய் டிவி, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தனது அடுத்த பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சன் டிவி சீரியல்களில் வலுவாக இருந்தாலும், புதுமையான ரியாலிட்டி ஷோக்கள் மூலம் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்வதில் விஜய் டிவி எப்போதும் முன்னணியில் உள்ளது. தற்போது சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியின் 3வது சீசன் தொடங்கப்பட உள்ளது.

23
பழைய கூட்டணியுடன் புதிய ஆட்டம்!

நடன உலகைக் கலக்கும் இந்த நிகழ்ச்சியின் 3வது சீசனில், ரசிகர்களுக்குப் பிடித்த அதே நடுவர் கூட்டணி மீண்டும் இணையுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் சாண்டி: தனது துள்ளலான நடனம் மற்றும் நகைச்சுவையால் மேடையை கலகலப்பாக்க வருகிறார்.

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்: நளினமான நடனம் மற்றும் நுணுக்கமான விமர்சனங்களை வழங்கத் தயாராகிவிட்டார்.

நடிகை ரம்பா: "அழகிய லட்டு" என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரம்பா, தனது எனர்ஜியால் ஷோவிற்கு மெருகூட்ட உள்ளார்.

33
வைரலாகும் முதல் புரொமோ

இந்த புதிய சீசனுக்கான முதல் அதிகாரப்பூர்வ புரொமோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் நடுவர்களின் என்ட்ரி மற்றும் போட்டியாளர்களின் சில காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த மேடையிலிருந்து பல நடனக் கலைஞர்கள் வெள்ளித்திரைக்குச் சென்றுள்ள நிலையில், இந்த முறை கலந்துகொள்ளப் போகும் அந்த 'மாஸ்' ஜோடிகள் யார் என்பது குறித்த விவாதங்கள் இப்போதே தொடங்கிவிட்டன.  https://www.youtube.com/watch?v=SV_RKMZHr7U&t=11s   

Read more Photos on
click me!

Recommended Stories