எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசி செய்த தில்லுமுல்லு வேலையை கண்டுபிடித்த ஜனனி, நீ நாளை ஜெயிலுக்கு போகப் போற என மிரட்டி உள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஜனனியின் தமிழ் சோறு பிசினஸுக்கு பல்வேறு வழிகளில் குடைச்சல் கொடுத்து வந்த ஆதி குணசேகரன், அறிவுக்கரசியை ஏவிவிட்டு, சாப்பாட்டில் கலப்படம் செய்து சிக்க வைக்க பார்த்தார். அந்த பிளான் சொதப்பியதை அடுத்து, நெய்யில் பேதி மருந்தை கலந்து, அதன்மூலம் கடையை இழுத்து மூட வைக்கலாம் என பிளான் போட்டார். அவர்கள் திட்டமிட்டபடியே நெய்யில் பேதி மாத்திரையை முல்லை கலந்துவிட்ட நிலையில், நல்வாய்ப்பாக, அந்த நெய் பாட்டில் தவறி விழுந்து கீழே விழுந்து விடுகிறது. அதை ஒரு பெண் எடுத்து சாப்பிட்டு மயக்கம் போட்டு விழுந்த பின்னர் தான் அதில் ஏதோ கலந்திருக்கும் விஷயம் ஜனனிக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.
24
மெதப்பில் இருந்த அறிவுக்கரசி
நாம கலந்துகொடுத்த நெய்யை சாப்பாட்டில் ஊற்றி இருப்பார்கள் என்றும், அதை சாப்பிட்டவர்கள் மயக்கம்போட்டு விழுந்து பிரச்சனை ஆகியிருக்கும் எனவும் அறிவுக்கரசியும், முல்லையும் நினைத்துக் கொண்டிருக்க, இரவு கடையை மூடிவிட்டு அனைவரும் வீட்டுக்கு வருகிறார்கள். அப்போது டயர்டில் வந்து ஹாலில் உள்ள டைனிங் டேபிளில் அமர்கிறார் நந்தினி. அவரிடம் வந்து, என்ன நந்தினி சிஸ்டர் போச்சா என பேசிக் கொண்டிருக்க, அப்போது எழுந்து முல்லைக்கு ஒரு அறைவிடும் நந்தினி, ஏண்டா ஓனாண் மூக்கா, நீயும் உன் உடன்பிறப்பு சேர்ந்து கண்ட வேலையை செஞ்சா நீங்க நினைச்சதெல்லாம் நடந்திருமா என கேட்கிறார்.
34
வார்னிங் கொடுத்த ஜனனி
எப்படி நாம் நெய்யில் கலப்படம் செய்தது இவர்களுக்கு தெரியவந்தது என அறிவுக்கரசியும், முல்லையும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அப்போது பேசும் ஜனனி, நாளைக்கு காலையில ரெடியா இரு, போலீஸ் வீட்டு வந்து உன்னோட ஜாமினை கேன்சல் பண்ணிட்டு உன்னை கூட்டிட்டு போகும் என சொல்ல, ஜெர்க் ஆகிறார் அறிவுக்கரசி. ஏனெனில் அவர் கெவின் என்கிற போட்டோகிராபரை கொலை செய்த வழக்கில் சில மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து தற்போது ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். இந்த நெய்யில் கலப்படம் செய்த புகாருக்காக அவரை மீண்டும் போலீஸில் பிடித்துக் கொடுக்க பிளான் போட்டு இருக்கிறார் ஜனனி.
தலைமறைவாக இருக்கும் ஆதி குணசேகரன் தன் தம்பிகளை வீட்டுக்கு செல்லுமாறு அனுப்பி விடுகிறார். தன் தம்பிகள் கிளம்பும் முன் அவர்களிடம் எமோஷனலாக பேசும் குணசேகரன், திரும்ப நம்ம பார்ப்போமா, பார்க்க மாட்டோமானு எனக்கு தெரியல என சொன்னதும் கதிரும் ஞானமும் கண்கலங்குகிறார்கள். இதையடுத்து ஜனனியின் தமிழ் சோறு பிசினஸை அடிச்சு நொறுக்க வெறியோடு கிளம்புகிறார் கதிர். அவரோடு ஞானமும் செல்கிறார். அங்கு சென்று என்ன செய்யப்போகிறார் கதிர்? அவரை போலீஸில் சிக்க வைப்பாரா ஜனனி? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.