ரோகிணியை தொடர்ந்து மனோஜுக்கு ஆப்பு வைத்த பைனான்சியர்... சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Jan 19, 2026, 08:52 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவிடம் உதவி கேட்டும் செல்லும் ரோகிணிக்கு அவர் உதவ மறுத்துவிடுகிறார். இதனால் மீனாவையே மிரட்டி இருக்கிறார் ரோகிணி. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய அனைத்து உண்மைகளும் வெளிய வந்துள்ள நிலையில், அவர் வீட்டை விட்டே துரத்தப்பட்டு தற்போது சிந்தாமணியிடம் தஞ்சம் புகுந்துள்ளார். ரோகிணியை வைத்து ஆட்டத்தை தொடங்கி உள்ள சிந்தாமணி, அவரை மீண்டும் விஜயா வீட்டுக்கு செல்ல வைத்து அங்கிருந்து அவர்கள் ரோகிணியை வீட்டை விட்டு துரத்திவிடுவதை வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார் சிந்தாமணி. அவர்கள் டைவர்ஸ் கேட்கும் போது இதைக்காட்டி மிரட்டலாம் என பிளான் போட்டு வைத்திருக்கிறார் ரோகிணி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
ரோகிணிக்கு பதிலடி கொடுத்த மீனா

ரோகிணி, ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு செல்ல அங்கு ஸ்ருதியும், மீனாவும் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது அவர்களிடம் உங்களிடம் ஒரு உதவி கேட்டு தான் வந்திருப்பதாக சொல்கிறார் ரோகிணி. மனோஜை மீண்டும் என்னுடன் சேர்த்து வைக்க நீங்கள் இருவரும் உதவ வேண்டும் என கேட்கிறார். ஆனால் அதற்கு முடியவே முடியாது என சொல்லிவிடுகிறார் மீனா, நீ பண்ணுன வேலைக்கு உனக்கு உதவி பண்ணி மறுபடியும் எனக்கு கெட்ட பெயர் கிடைக்கனுமா என சொல்ல, நீங்க மட்டும் எனக்கு உதவி செய்யலேனா நாளைக்கே உங்களுக்கு ஒரு பிரச்சனை வரும்போது நான் துணை நிற்க மாட்டேன் என சொல்கிறார். என்ன மிரட்டுறியா, இதுக்கெல்லாம் நாங்க பயப்படமாட்டோம், தயவு செஞ்சு இங்க இருந்து கிளம்பு என திட்டி அனுப்புகிறார் மீனா.

35
நாச்சியாருக்கு தெரியவந்த உண்மை

மறுபுறம் வீட்டிற்கு அண்ணாமலையின் அம்மா வந்திருக்கிறார். அவர் திடீரென வந்திருப்பதை பார்த்து அனைவரும் ஷாக் ஆகிறார்கள். அவர் தான் மீனா மயங்கி விழுந்த விஷயம் தெரிந்து வந்திருப்பதகாக சொல்ல, அனைவரும் நல்ல வேளை ரோகிணி மேட்டர் அவருக்கு தெரியவில்லை என நிம்மதி அடைகிறார்கள். அப்போது ட்விஸ்ட் கொடுக்கும் நாச்சியார், எல்லாம் எனக்கு தெரியும் என சொல்ல, எப்படி என அண்ணாமலை கேட்கிறார். அப்போது ரூமில் இருந்து வெளியே வரும் விஜயா, நான் தான் எல்லாத்தையும் உங்க அம்மாகிட்ட சொல்லி இங்க வர சொன்னேன் என கூறுகிறார்.

அம்மா வர சொல்லிருந்தா எதுவும் உள்குத்து இல்லாம இருக்காதே என முத்து சந்தேகப்பட, விஜயா எதற்காக நாச்சியாரை வர சொன்னேன் என்கிற உண்மையை போட்டுடைக்கிறார். மனோஜுக்கு வேறு கல்யாணம் பண்ணி வைக்கனும் அதற்காக பொண்ணு பார்க்க வேண்டும் என சொல்ல, அண்ணாமலை அவரை திட்டுகிறார். அப்போது அங்கு வரும் மனோஜ், பாட்டியை கட்டிப்பிடித்து அழுகிறார். அவரிடம் எல்லாம் நல்லதுக்குனு நினைச்சிக்கோ என ஆறுதல் சொல்கிறார் நாச்சியார். பின்னர் ஊரில் நிறைய வேலை இருக்கிறது என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் நாச்சியார்.

45
ரோகிணியின் போட்டோவை கொளுத்தும் மனோஜ்

இதையடுத்து மறுநாள் காலையில், மனோஜ் ரூமில் இருந்து வரும் போது ரோகிணி என்னோட சட்டைய எங்க என கேட்டபடி வெளியே வருகிறார். அப்போது அனைவரும் அவரைப் பார்த்து ஷாக் ஆகிறார்கள். பின்னர் அங்கு வரும் விஜயா, மனோஜை சத்தம் போடுகிறார். அந்த ரோகிணியோட, போட்டோ இருக்குறதுனால தான அவ நினைப்பு வருது, என சொல்லி, அங்கிருந்த திருமண புகைப்படங்களை எடுத்து உடைத்து, அதில் இருந்த போட்டோவை எடுத்து மனோஜ் கையில் கொடுத்து கொளுத்த சொல்கிறார். அவரும் ரோகிணியின் புகைப்படங்களை தீயிட்டு கொளுத்தி விடுகிறார்.

55
பைனான்சியர் வைத்த செக்

அந்த சமயத்தில் மனோஜுக்கு கடன் கொடுத்த பைனான்சியர் வீட்டுக்குள் எண்ட்ரி ஆகிறார். அவர் உள்ளே வந்து ரோகிணி விஷயம் எனக்கு தெரிய வந்தது என சொல்லி, மனோஜிடம் எப்போ கடனை திருப்பி கொடுக்க போற என கேட்பதோடு, தான் ரோகிணியை நம்பி தான் கடன் கொடுத்ததாகவும், இந்த மனோஜ் எதற்கு லாயக்கில்லாத ஒரு இழிச்சவாயன், இவன் கடனை திருப்பி கொடுப்பான்னு நம்பிக்கை இல்லை என பேசுகிறார். அன்றைக்கு வேறு மாதிரி பேசிவிட்டு இன்னைக்கு இப்படி பேசுறீங்களே என அண்ணாமலை கேட்க, எனக்கு என்னோட பணம் தான் முக்கியம் என சொல்ல, அருகில் இருந்த விஜயா, உங்க பணத்துக்கு நான் கியாரண்டி என சொல்லி அவர் கொடுத்த பத்திரத்தில் கையெழுத்து போடுகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories