Pandiyan stores S2 E693: மயிலுக்கு மூடுவிழா! ஒட்டுமொத்தமாக கைவிட்ட பாண்டியன் குடும்பம்! கோமதி எடுத்த அதிரடி முடிவு!

Published : Jan 19, 2026, 07:58 AM IST

Pandiyan stores S2 E693: பாண்டியன் வீட்டினர் உடமைகளைத் திருப்பி அனுப்பியதால் தங்கமயில் மனமுடைந்து போகிறார். அவரது தாய் பாக்கியம் நீதிமன்றம் செல்ல சபதம் ஏற்க, மறுபுறம் குடும்பத்தை ஒன்று சேர்க்க ராஜி தன் தந்தையை சந்திக்க துணிச்சலான முடிவை எடுக்கிறார்.

PREV
15
உடைந்த கனவுகள்: கதறி அழுத தங்கமயில்!

இன்றைய எபிசோட் தங்கமயிலின் வீட்டில் சோகமான சூழலுடன் தொடங்குகிறது. மனவேதனையில் சாப்பிடாமல் இருக்கும் தங்கமயிலை அவரது தாய் பாக்கியம் சமாதானம் செய்து சாப்பிட அழைக்கிறார். அந்த நேரத்தில், வெளியே ஒரு வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்கிறது. உடனே தங்கமயிலின் தந்தை, "மாப்பிள்ளை வீட்டில் இருந்து வண்டி வந்திருக்கிறது" என்று கூற, பாண்டியன் வீட்டு ஆட்கள் தன்னை மீண்டும் அழைத்துச் செல்லத்தான் வந்துவிட்டார்கள் என்று மயில் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்.

ஆனால், அந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள்கூட நீடிக்கவில்லை. வாசலுக்குச் சென்று பார்த்த மயிலுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கு வந்தது அவரை அழைத்துச் செல்ல வந்த வண்டி அல்ல; பாண்டியன் வீட்டில் இருந்த மயிலின் உடமைகளைத் திருப்பி அனுப்ப வந்த வண்டி! இதைப் பார்த்ததும் இடிந்து போன மயில், மயக்கமுற்று விழப்போக, அவரது தங்கை ஓடி வந்து தாங்கிப் பிடிக்கிறார். "எல்லாம் போச்சு... என் வாழ்க்கையே போச்சு!" என்று மயில் கதறி அழுவது பார்ப்பவர் நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது.

25
பாக்கியத்தின் சபதம்: நீதிமன்றத்திற்குப் போகும் மயில் குடும்பம்?

வண்டியில் இருந்து மயில் கொண்டு வந்த துணிமணிகள் மட்டுமல்லாமல், இதுவரை பொங்கல் மற்றும் தீபாவளிக்கு பாக்கியம் வீட்டில் இருந்து பாண்டியன் வீட்டிற்கு அனுப்பப்பட்ட அனைத்துப் பொருட்களுமே திருப்பி அனுப்பப்பட்டிருந்தன. இதைப்பார்த்த பாக்கியம் கடும் ஆத்திரமடைகிறார்.

“பொருட்களைத் திருப்பி அனுப்பிய பாண்டியனும் கோமதியும், தொலைந்து போன என் மகளின் வாழ்க்கையைத் திருப்பித் தருவார்களா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்புகிறார். சரவணன் ஆசையாக வாங்கித் தந்த புடவையை மார்போடு அணைத்துக்கொண்டு மயில் அழும் காட்சி, ஒரு பெண்ணின் புகுந்த வீட்டு வாழ்க்கை பறிபோன வலியைப் பிரதிபலித்தது. இறுதியாக, பாக்கியம் ஒரு சபதம் எடுக்கிறார்: "மயிலை மீண்டும் அந்த வீட்டிற்கு அனுப்பியே தீருவேன்; தேவைப்பட்டால் பாண்டியன் குடும்பத்தை நீதிமன்றத்தில் சந்திப்பேன்!" என்று வீர வசனம் பேசி அதிரடி காட்டுகிறார்.

35
பாண்டியன் வீட்டில் பிளாக் செய்யப்பட்ட மயில்!

மறுபுறம், பாண்டியன் வீட்டில் கோமதி, ராஜி மற்றும் மீனா ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வரும் பழனியிடம், சரவணனின் நிலையை நினைத்துக் கோமதி வருந்துகிறார். "மயில் சரவணனை ஏமாற்றிவிட்டாளே" என்று அவர் புலம்பிக் கொண்டிருக்கும்போதே, கோமதியின் போனுக்கு மயிலிடமிருந்து அழைப்பு வருகிறது.

கோபத்தின் உச்சத்தில் இருக்கும் கோமதி, அந்த அழைப்பை எடுக்காமல் மயிலின் எண்ணை பிளாக் செய்யச் சொல்கிறார். அதன்பின்னர் மயில் பழனிக்கு போன் செய்ய, கோமதி விடாப்பிடியாக மீனா, ராஜி என அனைவரது போனிலும் மயிலின் நம்பரை பிளாக் செய்ய வைக்கிறார். இதன் மூலம் மயில் மற்றும் பாண்டியன் குடும்பத்திற்கு இடையிலான தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்படுகிறது.

45
அதிர்ச்சியை ஏற்படுத்திய ராஜியின் முடிவு: தந்தையைச் சந்திப்பாரா?

இதற்கிடையில், ராஜி தான் எழுதி வைத்த கடிதத்தை அப்பா (முத்துவேல்) மற்றும் சித்தப்பா படித்தார்களா என்று பழனியிடம் கேட்கிறார். அவர்கள் அந்தக் கடிதத்தைத் திரும்பத் திரும்பப் படிப்பதாகவும், விரைவில் மனமாற்றம் ஏற்படும் என்றும் பழனி நம்பிக்கை கூறுகிறார். "அதிசயங்கள் நடக்கும்" என்று மீனாவும் ஆதரவு தெரிவிக்கிறார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார் ராஜி. "நானே நேரில் சென்று அப்பா மற்றும் சித்தப்பாவிடம் பேசிப் பார்க்கவா?" என்று அவர் கேட்க, கோமதி அதிர்ச்சியில் உறைகிறார். "இது தேவையில்லாத வேலை" என்று கோமதி தடுத்தாலும், குடும்பம் ஒன்று சேர நாம்தான் முயற்சி செய்ய வேண்டும் என்று ராஜி உறுதியாக இருக்கிறார்.

55
கிளைமாக்ஸ் ட்விஸ்ட்

எல்லோருடைய பயத்தையும் மீறி, ராஜி துணிச்சலாகத் தனது தந்தை வீட்டின் வாசலில் காலடி எடுத்து வைக்கிறார். இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. ராஜியின் வருகை அந்த வீட்டில் புயலைக் கிளப்புமா அல்லது உறவுகளை இணைக்குமா என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்!

Read more Photos on
click me!

Recommended Stories