எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் போலீஸுக்கு பயந்து இத்தனை நாட்களாக ஓடி ஒளிந்து வந்த கதிர் மற்றும் ஞானம் தற்போது நேரடியாக வந்து ஜனனிக்கு சவால் விட்டுள்ளனர். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் பெண்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, தங்களின் கனவு ப்ராஜெக்டான தமிழ் சோறு பிசினஸை தொடங்கி இருக்கின்றனர். அதை தொடங்குவதற்குள் பல ரூபத்தில் குடைச்சல் கொடுத்தார் ஆதி குணசேகரன். ஆனால் அதையெல்லாம் மீறி, மதிவதினி என்கிற கலெக்டரின் சப்போர்ட் உடன் கடையை திறந்து பிசினஸை சக்சஸ்ஃபுல்லாக நடத்தி வருகிறார்கள். பிசினஸ் தொடங்கவிடாமல் தடுக்க பல தில்லுமுல்லு வேலைகளை பார்த்த குணசேகரன், கடை திறந்த பின்னரும் பல்வேறு வழிகளில் தடங்கல் செய்து வருகிறார்.
24
பிசினஸுக்கு அடுத்தடுத்து வந்த சிக்கல்
வீட்டிலேயே இருக்கும் அறிவுக்கரசியை ஏவிவிட்டு, அவரை சாப்பாட்டில் எதாவது கலப்படம் செய்ய சொல்ல, அவரும் பிரியாணியில் கரப்பான் பூச்சியை போட்டு பிசினஸுக்கே வேட்டு வைக்கப் பார்த்தார். அதுமட்டுமின்றி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு வந்த நேரத்தில் இதையெல்லாம் செய்தார். ஆனால் அதை முன்கூட்டியே ஜனனி பார்த்துவிட்டதால், அந்த பிரியாணியை தனியாக எடுத்து வைத்துவிட்டார். இதனால் ரெய்டில் சிக்காமல் தப்பித்தார். ஒருவேளை அந்த பிரியாணி சிக்கி இருந்தால், நிச்சயம் தமிழ் சோறு பிசினஸை அதிகாரிகள் இழுத்து மூடி இருப்பார்கள்.
34
ஜனனிக்கு தெரியவந்த உண்மை
கரப்பான் பூச்சி பிளான் ஒர்க் அவுட் ஆகாததால், நெய்யில் பேதி மாத்திரையை கலந்துவிட்டார்கள். ஆனால் நல்வாய்ப்பாக அந்த நெய் பாட்டில் கீழே விழுந்து உடைந்துவிடுகிறது. இருப்பினும் அதில் கலப்படம் செய்யப்பட்டு இருக்கிறது என்பதையும் ஜனனி கண்டுபிடித்துவிடுகிறார். அந்த நெய்யை தெரியாமல் தட்டிவிட்ட பெண் ஒருவர், அதை எடுத்து சாப்பிட்ட நிலையில், அவர் மயக்கம் போட்டு விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தான் இந்த விஷயமெல்லாம் ஜனனிக்கு தெரியவருகிறது. இந்த நிலைமைக்கு காரணாமான அறிவுக்கரசியை சும்மா விடக் கூடாது என முடிவெடுக்கிறார் ஜனனி.
அப்போது தான் அவருக்கு அடுத்த தலைவலி வருகிறது. இத்தனை நாட்களாக ஓடி ஒளிந்துகொண்டிருந்த கதிர் மீண்டும் குடைச்சல் கொடுக்க வந்திருக்கிறார். அவர் நேராக ஜனனியின் தமிழ் சோறு ஃபுட் டிரக் இருக்கும் இடத்துக்கே வந்து, இந்த வீட்டையே தலைகீழாக மாற்றி எங்க அண்ணனை ராஜா மாதிரி வந்து உட்கார வைப்பேன் என சவால்விடுகிறார். அதுமட்டுமின்றி இனிமேல் வீட்டில் எங்க ராஜ்ஜியம் தான் என்றும் திமிராக பேசுகிறார். இதையெல்லாம் மூட்டைகட்டிவிட்டு வீட்டுக்கு வந்து சேருங்க என ஞானம் சொல்ல, எந்த தைரியத்தில் இதையெல்லாம் பேசுறீங்க, உங்களுக்கு பயந்தெல்லாம் நாங்க கடையை மூட முடியாது என தடாலடியாக சொல்லிவிடுகிறார் ஜனனி. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது? கலெக்டரிடம் சொல்லி கதிரை கைது செய்ய சொல்வாரா ஜனனி? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.