ரோகிணி கொடுத்த புகார்... கைதாகும் விஜயா? தீப்பறக்கும் திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை

Published : Jan 18, 2026, 08:41 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவும் மனோஜும் ரோகிணியை வீட்டை விட்டு துரத்தியதை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ள சிந்தாமணி, அதைவைத்து கேம் ஆடி இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
15
Shocking Twist in Siragadikka Aasai

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மை அனைவருக்கும் தெரிய வந்ததை எடுத்து பல்வேறு எதிர்பாரா திருப்பங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் விஜயா, ரோகிணியை வீட்டை விட்டு துரத்தியதால் அவர் தற்போது சிந்தாமணியிடம் அடைக்கலம் கேட்டு தங்கி இருக்கிறார். ரோகிணிக்கு அடைக்கலம் கொடுத்தது மட்டுமின்றி அவரை வைத்து விஜயாவை பழி வாங்கவும் திட்டம் தீட்டுகிறார் சிந்தாமணி. அதன் முதல் படியாக ரோகிணியை மீண்டும் வீட்டுக்கு சென்று தான் சொல்வதைப் போல் செய்யச் சொல்கிறார் சிந்தாமணி. அவரின் பேச்சைக் கேட்டு ரோகிணியும் கிளம்பி விஜயா வீட்டுக்கு செல்கிறார்.

25
வீடியோ எடுக்கும் சிந்தாமணி

அதற்கு முன்னதாகவே அங்கு சென்று விடும் சிந்தாமணி, விஜயாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ரோகிணி வந்ததைப் பார்த்து டென்ஷன் ஆகும் விஜயா எதுக்குடி வந்த என கேட்க, அதற்கு அவர் என்னுடைய துணியை எல்லாம் எடுக்க வந்தேன் என சொல்கிறார். பின்னர் மனோஜ் வேக வேகமாக ரூமுக்குள் சென்று ரோகிணியின் துணிகள் அனைத்தையும் ஒரு பெட்டியில் வைத்து வெளியே கொண்டு வந்து போட்டுவிட்டு ரோகிணியையும் வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுகிறார். அங்கிருந்த சிந்தாமணி மனோஜும், விஜயாவும் சேர்ந்து ரோகிணியை வீட்டை விட்டு துரத்துவதை வீடியோவாக பதிவு செய்து விடுகிறார்.

35
விஜயாவுக்கு பணம் கொடுத்த சிந்தாமணி

அதன் பின்னர் விஜயா வீட்டை விட்டு கிளம்பும் முன் அவரிடம் தனியாக சென்று பேசும் சிந்தாமணி, 50,000 ரூபாய் பணத்தை எடுத்து கொடுக்கிறார். இதெல்லாம் எதுக்கு என விஜயா கேட்க, டைவர்ஸ் கேஸ் என அலைவீர்கள், அதற்கு இந்த பணம் உதவியா இருக்கும் என கொடுத்து விட்டு செல்கிறார். பின்னர் வீட்டுக்குச் சென்றதும் ரோகிணியிடம் அவரது அம்மா, தான் முத்துவையும் அண்ணாமலையும் சந்தித்து பேசியதை சொல்கிறார். நீ எதுக்கு அங்க போன என ரோகிணி கேட்க, நீ பண்ணுன வேலைக்கு நான் போய் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டு வந்தேன் என சொல்கிறார். இதைக் கேட்ட சிந்தாமணி நீங்க ஏன் அவங்க கிட்ட போய் மன்னிப்பு கேட்கணும், அவங்களே உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிற மாதிரி ஒரு விஷயம் பண்ண போறோம் என தங்கள் பிளானை எல்லாம் சொல்கிறார் சிந்தாமணி.

45
ரோகிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

விஜயா ரோகிணியை வீட்டை விட்டு துரத்திய வீடியோவை காட்டி, அவர்கள் உங்கள் மகளை கொடுமைப்படுத்தியதாக போலீசில் புகார் அளிக்க உள்ளதாக சொல்கிறார் சிந்தாமணி. இதைக் கேட்ட ரோகிணி அம்மா தயவு செய்து இதெல்லாம் பண்ணிராதீங்க, அப்புறம் என் மகளை அவங்க வீட்டிலேயே சேர்க்க மாட்டாங்க என சொல்கிறார். பின்னர் மறுநாள் ரோகிணிக்கு மனோஜிடமிருந்து போன் வருகிறது. உடனே கிளம்பி ஷோரூமுக்கு வா என கூறுகிறார் மனோஜ். தன்னை மன்னித்து மீண்டும் ஏற்றுக் கொள்ள அவர் அழைக்கிறார் என நினைத்து அங்கு செல்லும் ரோகிணிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்னவென்றால் ரோகிணிடம் டைவர்ஸ் பேப்பரை காட்டி கையெழுத்து போட சொல்கிறார் மனோஜ். முடியவே முடியாது என மறுத்து விடுகிறார் ரோகிணி. சரி விடு அவளை நம்ம கோர்ட்ல பாத்துக்கலாம் என கூறுகிறார் விஜயா.

55
கைதாகும் விஜயா?

நிலைமை கை மீறி போனதால் சிந்தாமணி எடுத்த வீடியோவை கொண்டு போய் போலீஸிடம் காட்டி வரதட்சணை கொடுமை செய்வதாக விஜயா மீது புகார் கொடுக்கிறார் ரோகிணி. இதையடுத்து போலீசார் அந்த புகாரின் அடிப்படையில் விஜயாவை கைது செய்ய வீட்டுக்கே செல்கிறார்கள். அப்போது விஜயாவுடன் மீனா மட்டுமே வீட்டில் இருக்க போலீஸ் உங்கள் மீது வரதட்சணை கொடுமை புகார் வந்திருப்பதாக கூறி விஜயாவை தடாலடியாக கைது செய்கின்றனர். இதையடுத்து என்ன ஆனது? போலீஸ் பிடியிலிருந்து விஜயா தப்பினாரா என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories