சிறகடிக்க ஆசை சீரியலில், கிரிஷின் ஏக்கமான பேச்சால் முத்துவின் மனம் மாறத் தொடங்குகிறது. மறுபுறம், குடும்பத்தை பிரிக்க சிந்தாமணி சதி செய்ய, உதவி கேட்கும் ரோகிணியை மீனா நிராகரிப்பதால் இருவருக்கும் இடையே மோதல் வெடிக்கிறது.
விஜய் டிவியின் டாப் சீரியலான 'சிறகடிக்க ஆசை' இப்போது அனல் பறக்கும் திருப்பங்களுடன் நகர்ந்து வருகிறது. ரோகிணியின் கள்ளத்தனம் அம்பலமான பிறகு, மீனா மீது கோபத்தில் இருந்த முத்துவின் மனதை மாற்றும் விதமாக இன்றைய எபிசோட் அமைந்திருந்தது.
இன்றைய எபிசோடின் தொடக்கமே அதிர்ச்சியுடன் தொடங்கியது. விஜயாவை நேரில் சந்திக்கும் சிந்தாமணி, "உங்க பையனுக்கு அந்தப் பொண்ணு செட் ஆகாது, பணத்தை வச்சுக்கோங்க.. விவாகரத்து கேஸ் போடுங்க" என நைசாக மூட்டி விடுகிறார். ஏற்கனவே ரோகிணியை குடும்பத்திற்கு எதிராக திருப்பிய சிந்தாமணி, இப்போது விஜயாவையும் ரோகிணிக்கு எதிராக தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார். 'ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்பது போல இந்த வில்லி கூட்டணி ஆட்டம் போடுகிறது.
24
முத்துவை உலுக்கிய கிரிஷின் கேள்வி!
மறுபுறம், கிரிஷ் தன் பாட்டியுடன் ஊருக்கு கிளம்பும் காட்சி நெஞ்சை உருக்கியது. தற்செயலாக முத்துவை சாலையில் பார்த்த கிரிஷ், ஓடி வந்து அவரைக் கட்டிப்பிடித்துக் கொள்கிறான். "எங்க அம்மா தான் ரோகிணின்னு உங்களுக்கு தெரிஞ்சிருச்சாமே? அப்போ இனிமே நாங்க உங்க கூடவே இருக்கலாமா? அம்மாவையும் என்னையும் உங்க வீட்டுல வச்சுக்கோங்க" என அந்தப் சிறுவன் ஏக்கத்துடன் கேட்க, முத்து நிலைகுலைந்து போகிறார்.
அப்போது அண்ணாமலையிடம் கிரிஷின் பாட்டி மன்னிப்பு கேட்கிறார். "என் பொண்ணு வாழ்க்கையை காப்பாத்தவே இந்த உண்மையை மறைச்சோம்" என அவர் கூற, அண்ணாமலை முத்துவிடம், "இதே பையனுக்காக தான் மீனாவும் உண்மையை சொல்லாம மறைச்சிருப்பா.. அவளும் பாவம் தானே" என புரிய வைக்கிறார். முத்துவுக்கு இப்போதுதான் மீனாவின் பக்கம் இருக்கும் நியாயம் உறைக்கத் தொடங்குகிறது.
34
ரோகிணியின் திமிர் பேச்சு: பதிலடி கொடுத்த மீனா!
இறுதியில், ரெஸ்டாரண்டில் மீனாவும் ஸ்ருதியும் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு வரும் ரோகிணி, "ஏன் உண்மையை முத்துவிடம் சொன்னீங்க?" என மல்லுக்கட்டுகிறார். அதற்கு மீனா, "நான் சொல்லல, மனோஜ் மூலமா தான் அவருக்கு தெரிஞ்சது. உன் பொய்களால நான் இப்போ குற்றவாளியா நிக்கிறேன்" என ஆவேசப்படுகிறார்.
மீண்டும் தனக்கு உதவி செய்யுமாறு ரோகிணி கேட்க, மீனா அதைத் தெறிக்கவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த ரோகிணி, "நீ மட்டும் உன் புருஷனோட சந்தோஷமா வாழ்ந்துட முடியுமான்னு பார்க்குறேன்" என பழிவாங்கும் நோக்கில் சவால் விடுகிறார். மீனா-ரோகிணி இடையேயான இந்தப் போட்டி இனி வரும் நாட்களில் இன்னும் சூடுபிடிக்கும் எனத் தெரிகிறது. முத்து மீனாவை சமாதானப்படுத்துவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!