S2 E691 Pandiyan Stores 2: தங்க மயிலின் மோசடி அம்பலமானதால், பாண்டியன் குடும்பத்தில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. இனி தங்க மயிலுக்கும் சரவணனுக்கும் எந்த உறவும் இல்லை என பாண்டியன் அதிரடி முடிவு எடுத்து, அவரிடம் மன்னிப்பும் கேட்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில், தங்க மயிலின் மோசடி அம்பலமான பிறகு, பாண்டியன் குடும்பத்திலும் பழனி குடும்பத்திலும் ஏற்பட்டுள்ள அதிர்வலைகளும், எடுக்கப்பட்ட அதிரடி முடிவுகளும் சீரியல் ரசிகர்களுக்கு எதிர்பாராத திருப்பங்களை தருகின்றன.
25
பழனி குடும்பத்தின் ஆவேசம் மற்றும் ராஜியின் கடிதம்
பழனி தனது குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, தங்க மயில் குடும்பத்தின் பொய்கள் குறித்து விவாதம் எழுகிறது. அப்போது பழனியின் அம்மா, "தங்க மயில் குடும்பம் சொன்னது அத்தனையும் பொய்யா? பாக்கியமும் அவரது கணவரும் உண்மையில் அவளது பெற்றோர்கள் தானா?" என ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார். தங்க மயில் ஒரு 'பாம்பு' போன்றவள் என்றும், அவளுக்கு எக்காரணம் கொண்டும் கோமதி இரக்கப்பட்டு வீட்டில் சேர்க்கக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கிறார்.
தொடர்ந்து, ராஜி தனது தந்தை மற்றும் சித்தப்பாவுக்கு எழுதிய கடிதங்கள் குறித்து பழனி விசாரிக்கிறார். அதற்கு அவரது அண்ணிகள், அந்த கடிதங்களை அவர்கள் இருவரும் அடிக்கடி படித்துப் பார்ப்பதாகக் கூறுகின்றனர். இரு குடும்பங்களும் ஒன்று சேர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. சொந்த மகள் எதிர்த்த வீட்டில் இருந்தும் தாய் பேசாமல் இருப்பது மிகவும் வருத்தமான விஷயம் என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
35
பாண்டியனின் அதிரடி முடிவு மற்றும் மன்னிப்பு
மறுபுறம் பாண்டியன் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் அமர்ந்துள்ளனர். சாப்பாட்டிற்கு கதிரை ஹோட்டலுக்கு அனுப்பிய பின், பாண்டியன் ஒரு முக்கியமான முடிவை அறிவிக்கிறார். பாக்கியம் குடும்பத்தினர் மீது வழக்கு போடலாம் என மகள் கூறியபோது பாண்டியன் அதை மறுத்துவிட்டாலும், தங்க மயிலுடன் இனி எவ்வித உறவும் கிடையாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
"தங்க மயில் இனி நம்ம வீட்டிலும் இல்லை, சரவணன் வாழ்க்கையிலும் இல்லை" என பாண்டியன் தீர்க்கமாக கூறுகிறார். மயிலின் உடமைகள் அனைத்தையும் அவர் வீட்டுக்கே திருப்பி அனுப்ப உத்தரவிடுகிறார். மேலும், இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணமாக இருந்ததற்காகத் தனது மகன் சரவணனிடம் பாண்டியன் கண்கலங்கி மன்னிப்பு கேட்கிறார். சரவணனும், மயிலுடன் இனி சேர்ந்து வாழ தனக்கு துளியும் விருப்பமில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.
கோமதி, மீனா மற்றும் ராஜியிடம் பேசும்போது, வீட்டில் நடக்கும் எந்த விஷயத்தையும் மயிலிடம் பகிர வேண்டாம் என நிபந்தனை விதிக்கிறார். "கெட்டவர்களுக்கு நல்லது செய்ய வேண்டிய அவசியம் இல்லை" என்று அவர் கூறுகிறார். அப்போது அங்கு வரும் மீனாவின் கணவர், மயிலிடம் பேசினாயா என்று கேட்டதும், மீனா அவர் மீது கடும் கோபம் கொள்கிறார். குடும்பத்தின் இந்த இக்கட்டான சூழலில் மயிலைப் பற்றி விசாரிப்பது அவருக்கு எரிச்சலைத் தருகிறது.
55
ராஜியின் மௌனம் மற்றும் கணவனின் ஆறுதல்
எபிசோடின் இறுதியில், ராஜியும் அவரது கணவரும் தனியாகப் பேசிக்கொள்கிறார்கள். "எந்தப் பிரச்சனை வந்தாலும் உன்னைப் பாதுகாக்க உன் புருஷனாக நான் இருப்பேன்" என்று அவர் ஆறுதல் கூறுகிறார். மேலும், தான் இன்று பாண்டியனுடன் தங்குவதாகவும், அதைத் தவறாக நினைக்க வேண்டாம் என்றும் ராஜியிடம் கூறுகிறார். இந்த உரையாடலின் போது ராஜி மௌனமாக இருந்தாலும், குடும்பச் சூழலை உணர்ந்து அமைதி காக்கிறார். தங்க மயிலின் உறவை முறித்துக் கொள்ள பாண்டியன் எடுத்த இந்த முடிவு, குடும்பத்தில் அடுத்தடுத்த மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.