இதையடுத்து மயில், கோமதிக்கு போன் போடுகிறார். இவ எதுக்கு எனக்கு போன் போடுறா, நான் எதுக்கு எடுக்கணும் என சொல்லி கட் பண்ணிவிடுகிறார் கோமதி. பின்னர் ராஜி, மீனா என ஒவ்வொருவருக்கும் போன் போடுகிறார் தங்கமயில், இதைக்கேள்விப்பட்ட கோமதி, எல்லாரும் அவ நம்பரை பிளாக் பண்ணுங்க என சொல்ல, அனைவரும் பிளாக் பண்ணிவிடுகிறார்கள். பின்னர் கடைக்கு சென்று சரவணனை பார்க்க செல்கிறார் தங்கமயில். அவளைப் பார்த்ததும் கோபப்படும் சரவணன், மரியாதையா நீ இங்க இருந்து போகலேனா நான் உன்னை என்ன பண்ணுவேன்னு தெரியாது என கோபத்தில் கத்துகிறார்.
அப்போது அங்கு வரும் பாண்டியன், இதோ பாருமா என்ன பண்றதா இருந்தாலும் அதை கோர்ட் மூலமா பண்ணு என சொல்லிவிட, கண்ணீர் சிந்தியபடி நிற்கிறார் மயில். இதையடுத்து அவரை இங்கிருந்து கிளம்பு என கூறுகிறார் பாண்டியன். இதையடுத்து என்ன ஆனது? மயில் எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.