எல்லாவற்றையும் விடக் கொடுமையாக, பாண்டியன் குடும்பத்தினர் அனைவரது போன் எண்களும் பிளாக் செய்யப்பட, மயில் தனிமைப்படுத்தப்பட்டார். சரவணன் ஆசையாக வாங்கித் தந்த புடவையைத் தடவிப் பார்த்து மயில் அழுதது, அவர் செய்த தவறுகளைத் தாண்டி ஒரு பெண்ணாக அவர் படும் அவஸ்தையைத் திரையில் தத்ரூபமாகக் காட்டியது. "நான் இனி இருக்கவே வேண்டியதில்லை" என்று மயில் எடுக்கும் விபரீத முடிவை நோக்கி பாக்கியம் கவலைப்படுவது கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது.
ராஜியின் துணிச்சலான முடிவு!
இன்னொரு பக்கம், பாண்டியன் வீட்டில் மயில் மீதான கோபம் குறையாத நிலையில், ராஜி ஒரு அதிரடி முடிவை எடுக்கிறார். தன் அப்பா முத்துவேலிடம் பேசி குடும்பத்தை ஒன்று சேர்க்க அவர் எடுத்த முயற்சியின் ஒரு பகுதியாக, இன்று தனது தந்தை வீட்டின் வாசலில் கால் பதித்தார் ராஜி. தங்கமயிலின் வாழ்க்கை இனி என்னவாகும்? பாக்கியம் சொன்னது போல நீதிமன்றம் வரை இந்த விவகாரம் செல்லுமா? ராஜியின் வருகை முத்துவேல் வீட்டில் என்ன மாற்றத்தைக் கொண்டு வரும்? நாளை எபிசோடில் பார்க்கலாம்!