பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், இன்றைய 422ஆவது எபிசோடில் குமாரு மற்றும் அரசியின் காதல் காட்சிகளுடன் தொடங்குகிறது. இருவரும் படத்திற்கு செல்வது பற்றி பேசிக் கொள்கிறார்கள். அரசி முடியாது என்று சொன்ன நிலையில், சுகன்யா சித்தியை தூது அனுப்பியிருக்கிறார் குமாரு. ஒரு கல்யாணத்தில் வந்த சண்டை இன்னொரு கல்யாணத்தில் சரியாகும். நீ குமார கல்யாணம் செய்து கொண்டால் ரெண்டு குடும்பமும் ஒன்று சேரும். நீ தனியா போகாத நானும் உன்னுடன் வருகிறேன். மதிய ஷோவிற்கு போலாம், யாருக்கும் தெரியாது என்று சொல்லி சம்மதிக்க வைக்கிறார்.
24
பயிற்சியின் போது கீழே விழுந்த ராஜு
இதையடுத்து ராஜீ ரன்னிங் பயிற்சி எடுக்கும் காட்சி தொடங்குகிறது. இதில், பயிற்சியின் போது ராஜீ கீழே விழுகிறார். இதனால், அலறியடித்துக் கொண்டு ஓடிய கதிர், அவரை தூக்கிவிட்டார். ஹாஸ்பிடலுக்கு போலாமா என்று கேட்க, கடைசியில் டீ வாங்கி கொடுக்கிறார். இருவரும் உன்னால் தான் எனக்கு கஷ்டம், என்னால் தான் உனக்கு கஷ்டம் என்று பேசிக்கொள்கிறார்கள். இது அவர்களது காதலை வெளிப்படுத்துகிறது. ஆனால், இன்னும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளவில்லை.
அடுத்து வீட்டில் இருக்கும் கோமதி, மீனா , அரசி, ராஜீ ஆகியோரின் காட்சிகள் இடம்பெறுகிறது. அரசிக்கு அடிக்கடி போனில் மெசேஜ் வரவே, கோமதிக்கு அரசி மீது சந்தேகம் வருகிறது. ஒரு கட்டத்தில் போனை பார்க்க வாங்குகிறார். ஆனால், வாங்காமல் அவரிடம் கொடுத்துவிடுகிறார். தங்கமயில் நடக்க முடியாமல் நடந்து வரவே வேலைக்கு புறப்படுகிறார். ஆனால் அவர் இப்போது தான் வேலைக்கு சேர்ந்திருக்கிறேன். அதனால் லீவு போட முடியாது என்று மயில் சொல்லிவிட்டு மதியத்திற்கு சாப்பாடு வாங்கி கொண்டு வேலைக்கு புறப்பட்டு செல்கிறார்.
44
அரசு வேலைக்கு பாண்டியனிடம் காசு கேட்கும் முடிவில் செந்தில்
கடைசியாக செந்தில், கதிர் மற்றும் பழனிவேல் மூவரும் வீட்டிற்கு வெளியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது செந்தில் தனது மாமனார் சொன்ன அரசு வேலையைப் பற்றி கதிரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து பாண்டியனும் வரவே, கதிர், செந்திலுக்காக அரசு வேலையைப் பற்றி சொல்கிறார். மேலும், அந்த வேலைக்கு பணம் கட்ட வேண்டும் என்று சொல்லவே, அதைப் பற்றி பாண்டியன் கேட்பதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது.