Anna Serial Today Update: அண்ணா சீரியலில் எப்படியும் சண்முகம் குடும்பத்தை பிரிக்க நினைக்கும் சௌந்தரபாண்டி தற்போது ஆடும் சகுனித்தனம் அம்பலம் ஆகுமா? என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.
பரணி தான் ரத்னா நிலைமைக்கு காரணம் என சண்முகம் கூறியதால், வீட்டில் இருந்து வெளியேறி நேற்று தன்னுடைய அப்பா சௌந்தரபாண்டி வீட்டுக்கு பரணி சென்ற நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். பரணி சண்முகத்தின் வீட்டில் இருந்து நடுராத்திரியில் சௌந்தரபாண்டி வீட்டுக்கு வர, பாக்கியம் இந்த நேரத்துல நீ என்னடி இங்க வந்துருக்க என அதட்டலாக பேச, வீட்டிற்கு வந்த பொண்ணை வானு சொல்லாமல் இப்படியா கேள்வி கேட்ப என பாக்கியம் மீது பரணி கோவப்படுகிறாள்.
26
பாக்கியம் மீது கோபம் கொள்ளும் பரணி
நீ உன் புருஷன் சண்முகத்தோட இங்க வந்திருந்தா வானு கூப்பிட்டு இருப்பேன். ஆனால் தனியா வந்திருக்கியே? ஒழுங்கா உன் வீட்டிற்கு கிளம்பி போய்ட்டு என சொல்கிறாள். இதற்க்கு சொந்தரபாண்டி ஏய் நீ என்ன என் பொண்ண கிளம்ப சொல்லுற. என் பொண்ணு இங்க தான் இருப்பா என்று பரணிக்கு சப்போர்ட் செய்து பேசி, அவளை உள்ளே அழைத்து வருகிறான்.
36
சௌந்தரபாண்டி திட்டம் பாண்டியம்மாவுக்கு புரிகிறது
பாண்டியம்மா என்னடா இவரு இப்போ திடீர்னு பரணிக்கு சப்போர்ட் பண்ணி பேசுறாரு அப்படினு கேட்க, அவ சண்முகத்துக்கிட்ட சண்டை போட்டு வந்திருக்கா. இதையே காரணமாக வச்சி அவங்க இரண்டு பேரையும் பிரிக்க போறேன் சொந்தரபாண்டி திட்டம் போடுகிறார் என்பது இவர்களுக்கு தெரிவாக புரிகிறது.
46
தூக்கம் வராமல் புலம்புகிறான் சண்முகம்
பின்னர் பரணி பாக்கியத்திடம் அப்பா என்னையும் சண்முகத்தையும் பிரிக்க தான் எனக்கு சப்போர்ட் செய்து பேசுறாரு என்பது எனக்கு நல்லாவே புரியும். அதை நான் பார்த்துக்கறேன் என்று சொல்கிறாள். மறுபக்கம் சண்முகம் தூக்கம் வராமல் நான் உன்னை புரிந்து கொள்ளலயா என்று புலம்புகிறான். இந்த பக்கம் பரணி, உனக்கு எப்போமே உன் தங்கச்சிங்க தான் முக்கியம்.. இந்த முறை நான் அமைதியா போக போறது இல்ல என்று பிடிவாதம் பிடிக்கிறாள்.
பரணி - சண்முகத்தை நிரந்தரமாக பிரிக்க நினைக்கும் சௌந்தரபாண்டி
பரணி - சண்முகத்தை நிரந்தரமாக பிரிக்க நினைக்கும் சௌந்தரபாண்டி, திண்ணையில் படுத்திருந்த சண்முகத்திடம் வந்து, என் பொண்ணு வீட்டை விட்டு வெளியில வந்த முதல் நாளே திண்ணைக்கு வந்துட்டியா அப்படினு பேசி, ஏளனமாக சிரிக்கிறான்.
பரணி அவ பொருள் எல்லாத்தையும் கொண்டு வர சொன்ன என்று சௌந்தரபாண்டி கேட்க, சண்முகம் அப்படியெல்லாம் இருக்காது என சொல்ல, பின்னர் பரணிக்கு போன் போட்டு பேச முயற்சிக்கிறான். பரணி போனை எடுக்காததால், மனம் உடைந்து அவளின் அணைத்து பொருட்களையும் தூக்கி வீசுகிறான்.
66
சகுனித்தனம் பண்ணும் சௌந்தரபாண்டி
இதன் பின்னர் வீட்டிற்கு வந்த சௌந்தரபாண்டி, அங்கும் தன்னுடைய சகுனி தனத்தை வெளிக்காட்டுகிறான். சண்முகம் இனிமே உன்னை அந்த வீட்டு பக்கம் வரக்கூடாது என கூறி உன் பொருட்களை கொடுத்து விட்டு சென்றதாக பொய் சொல்கிறான். பாக்கியம் அதை நம்ப மறுக்கிறாள். இப்படியான நிலையில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.