Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்தி - மேடையில் ஷாக் கொடுத்த சாமுண்டீஸ்வரி; 'கார்த்திகை தீபம்' அப்டேட்!

Published : Mar 06, 2025, 02:30 PM ISTUpdated : Mar 06, 2025, 02:34 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், கார்த்திகை தீபம் தொடர் எதிர்பாராத திருப்புமுனையுடன் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.  

PREV
16
Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்தி - மேடையில் ஷாக் கொடுத்த சாமுண்டீஸ்வரி; 'கார்த்திகை தீபம்' அப்டேட்!
karthigai deepam

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முக்கிய தொடரான 'கார்த்திகை தீபம்' சீரியலில் தற்போது, ரேவதி - மகேஷின் திருமண கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. 

26
பிஸ்னஸ் மேன் என்கிற உண்மையை உடைத்த கார்த்திக்

ரேவதியுடன் மகேஷ் டான்ஸ் ஆட வேண்டும் என தன்னுடைய விருப்பத்தை தெரிவித்த நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடக்க போகிறது? என்பதை தெரிந்து கொள்வோம். ராஜேஸ்வரிக்கு கார்த்திக் ஒரு பிஸ்னஸ் மேன் என்பது தெரிய வர, கார்த்தியை தனியாக அழைத்து நீங்கள் எப்படி இங்கே, அதுவும் ஒரு ட்ரைவரா இருக்க காரணம் என்ன என்பது பற்றி விசாரிக்கிறாள். ராஜேஸ்வரியிடம் பொய் சொல்லி எதையும் மறைக்க விரும்பாத கார்த்திக், நீங்கள் ராஜேஸ்வரி தானே உங்களை எனக்கு தெரியும் என ஒப்புக்கொள்கிறேன்.

கார்த்திக்குக்கு வந்த புது சிக்கல்; உண்மை சாமுண்டீஸ்வரிக்கு தெரிய வருமா? கார்த்திகை தீபம் அப்டேட்!

36
கார்த்திக்கு சப்போர்ட் செய்யும் ராஜேஸ்வரி

இதை தொடர்ந்து நான் எதுக்காக இங்கே வந்திருக்கிறேன் என்பது பற்றி ராஜேஸ்வரியிடம் சொல்லி புரிய வைக்கிறான். கார்த்திக் சொல்வதை புரிந்து கொண்ட ராஜேஸ்வரி, இரண்டு குடும்பத்தையும் நீங்கள் ஒன்னு சேர்க்க நினைப்பது மிகவும் நல்லது என கூறி ராஜேஸ்வரி சந்தோஷப்படுகிறாள். இந்த விஷயத்தை நான் சாமுண்டீஸ்வரியிடம் சொல்லமாட்டேன் என்றும் வாக்குறுதி தருகிறார்.

 


 

46
பாட்டி சொன்னதை செய்த மயில்வாகனம்

இன்னொருபுறம், ரேவதியுடன் மகேஷ் டான்ஸ் ஆட கூடாது என்பதற்காக பாட்டி சொன்ன இலையை பறித்து வந்து கோட்டில் தேய்த்து விடுகிறான் மயில்வாகனம். பின்னர் அந்த கோட்டை கொண்டு போய் மகேஷிடம் கொடுத்து, சாமுண்டீஸ்வரி போட்டு கொள்ள சொன்னதாக சொல்லி போட வைக்கிறான். 

Karthigai Deepam: மகேஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி - சம்மதம் சொன்ன சாமுண்டீஸ்வரி; கார்த்திகை தீபம் அப்டேட்!

56
மயில்வாகனம் செய்ததால் அரிப்பால் அவதிப்படும் மகேஷ்

ரேவதியுடன்... மகேஷ் மேடையில் டான்ஸ் ஆட துவங்கியதும் அவனுக்கு அரிப்பு ஏற்படுகிறது. இதனால் நடத்தனத்தில் சொதப்புகிறான். பிறகு ஸ்வாதி டான்ஸ் ஆடுகிறாள். மயில் வாகனமும் - ரோகிணியும் ரொமான்ஸ் செய்து கொண்டே டான்ஸ் ஆடுகின்றனர். இதையடுத்து எல்லாரும் சேர்ந்து நடனமாட சாமுண்டீஸ்வரி அங்கு வர அனைவரும் ஷாக் ஆகின்றனர். 

66
டான்ஸ் ஆடி ஷாக் கொடுக்கும் சாமுண்டீஸ்வரி:

யாரும் எதிர்பாராத விதமாக சாமுண்டீஸ்வரியும் அவர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆட எல்லாரும் சந்தோசப்படுகின்றனர். இப்படியான நிலையில், இன்று என்ன நடக்க போகிறது, ரேவதி கழுத்தில் தாலி கட்டப்போவது மகேஷா அல்லது கார்த்திக்கா என்பதை அறிய காத்திருப்போம்.

Read more Photos on
click me!

Recommended Stories