சௌந்தரபாண்டி தான் தன்னுடைய பொருட்களை, சண்முகம் வீட்டில் இருந்து எடுத்து வந்தது என்பது தெரிந்தும் பரணி எடுத்த அதிர்ச்சி முடிவு பற்றி இன்றைய எபிசோடில் பார்ப்போம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் 'அண்ணா'. அண்ணன் - தங்கைகள் அன்பை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின்,இன்றைய எபிசோடில் பாக்கியம், சண்முகம் தான், பரணியின் எல்லா பொருட்களையும் எடுத்து வீசியது என சொல்ல சௌந்தரபாண்டி சொன்னதை, நம்ப மறுக்கிறாள்.
26
போன் பண்ணியும் எடுக்காத சண்முகம்:
பரணியிடம் சென்று சண்முகம் அப்படி செஞ்சிருக்க வாய்ப்பே இல்ல. நீ மொதல்ல அவனுக்கு போன் போடு என கூற, பரணியும் சண்முகத்திற்கு போன் செய்கிறாள். ஆனால் சண்முகம் போனை எடுக்காத காரணத்தால் அவன் தானே கொண்டு வந்து வச்சான் என விரக்தியுடன் கூறிவிட்டு ரூமுக்குள் செல்கிறாள்.
இதன் பின்னர் பாக்கியம் சிவபாலனுக்கு போன் போட்டு தர சொல்லி, என்ன நடந்தது என்பது விசாரிக்க சௌந்தரபாண்டி தான் சண்முகம் வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்து எல்லாத்தையும் வாங்கிட்டு வந்தாரு என்று நடந்ததை சொல்கிறான். அடுத்து பாக்கியம், பரணியிடம் சென்று பேச சொல்ல சண்முகம் அதற்க்கு மறுப்பு தெரிவிக்கிறான். அப்போ அவளை அப்படியே விட போறியா என பாக்கியம் திட்டுகிறாள்.
46
மனம் மாறி பரணி கிளீனிக் சென்று பேச போகும் சண்முகம்
மனம் மாறிய சண்முகம் பரணியை பார்த்து பேச கிளினிக்கிற்கு செல்கிறான். வாசலிலேயே நிற்கும் சனியன் என்னை மீறி யாரும் அம்மாவை பார்க்க முடியாது என சண்முகத்தை தடுக்க, சண்முகம் சனியன் கையை பிடித்து முறுக்கி விட்டு பின்னர் உள்ளே நுழைகிறான். சொந்தரபாண்டி தான், பரணியின் பொருட்களை எல்லாம் கொண்டுபோனது என கூறுகிறான்.
பின்னர் தன்னுடைய மனதில் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, நீ மட்டும் தான் உன் தங்கச்சிகளுக்கு நல்லது பண்ணுவியா? நான் பண்ணுறது எல்லாமே கெட்டதுனு தான பேசுன... உனக்கு என் மேல சந்தேகம் இருக்கா என பல கேள்விகளை கேட்டு சண்முகம் மனதை நோகடிப்பதோடு, என்னால் அங்கு வரமுடியாது என கண்ணீருடன் கூறுகிறாள்.
66
பரணி மீதான பாசத்தை கோவமாக வெளிக்காட்டும் சண்முகம்
வீட்டுக்கு வரும் சண்முகத்திடம் பரணி பற்றி அனைவரும் கேட்க, அவள் வர மறுத்த தகவலை சொல்கிறாள். தன்னுடைய அண்ணனை வேண்டாம் என கூறிய அண்ணி எங்களுக்கும் வேண்டாமா ஏன், தங்கைகள் கூட... சண்முகம். பரணினா யார் தெரியுமா? என அவள் மீது உள்ள கோபத்தை தங்கைகளிடம் வெளிக்காட்டுகிறான். இப்படியான நிலையில், அடுத்து நடக்க போவது என்ன? என்பது பற்றி அறிய காத்திருப்போம்.