Pandian Stores 2 Serial 25 June 2026 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்திலின் ஆபிஸில் விஜிலென்ஸ் அதிகாரிகள் திடீரென ரெய்டு வந்துள்ளனர். அதைப்பற்றி பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில், பாண்டியனும் அவரது மகள் அரசியும் பைக்கில் சென்றுகொண்டிருக்க, அப்போது பஸ் ஸ்டாண்டில் தெரிந்தவர் ஒருவரை பார்த்ததும் பாண்டியன் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து அரசியன் தோழன் கதிரேசன் அங்கு வர, அவர் அரசி ஏன் பாண்டியன் பைக்கில் செல்கிறார் என குழப்பத்தில் இருக்கிறார். பின்னர் பைக்கில் செல்லும் அரசிக்கு போன் போடுகிறார் கார்த்திகேயன். அப்போது போனை எடுக்காத அரசி, பாண்டியன் தன்னை இறக்கிவிட்டு சென்றதும் போன் போட்டு பேசுகிறார்.
அப்போது அரசியிடம் என்னங்கள் அந்த ஆள் கூட பைக்ல போறீங்க என கேட்க, எதுக்கு கேக்குறீங்க என அரசி பதில் கேள்வி கேட்டதும். அவர் ஒரு சிடுமூஞ்சி என கூறுகிறார் கார்த்திகேயன். பின்னர் அவர் உங்களுக்கு என்ன வேண்டும் என கார்த்திகேயன் கேட்க, அவர் தான் என்னுடைய அப்பா என கூறுகிறார் அரசி. பின்னர் போனை கட் பண்ணிவிட்டு, அரசியை நேரில் சென்று சந்திக்கும் கார்த்திகேயன், அவருடன் நடுரோட்டில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது இருவரும் ஜாலியாக சிரித்து பேசுகிறார்கள்.
35
பிரச்சனை பண்ணும் குமார்
அரசியும், கார்த்திகேயனும் ஒன்றாக நின்று பேசிக் கொண்டிருப்பதை அந்த வழியாக வரும் குமார் பார்த்துவிடுகிறார். உடனே பைக்கை நிறுத்திவிட்டு, அரசியிடம் சென்று, யார் இவன், இவன்கூட நின்னு ஏன் பேசிக்கிட்டு இருக்க என கேட்கிறார். அப்போது அதெல்லாம் உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல, நீ இங்க இருந்து கிளம்பு என சொல்ல, அப்போது அரசியை அடிக்க பார்க்கிறார் குமார். அருகில் இருந்த கார்த்திகேயன் அதனை தடுத்து நிறுத்திய பின், அரசி குமாரை எச்சரிக்க, அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.
இதையடுத்து செந்தில் ஆபிஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்க, அப்போது அங்கு ஒரு பைலை எடுத்து வந்து நீட்டும் உதவியாளர், இதில் கையெழுத்து போட்டு கொடுக்க சொல்ல, செந்தில் போதுமான ஆவணங்கள் இல்லாத போதும் அந்த பைலில் கையெழுத்து போட்டு கொடுக்கிறார். அதற்காக செந்திலுக்கு லஞ்ச பணத்தை எடுத்து வந்து அந்த உதவியாளர் கொடுக்க, அப்போது டிராவில் இடம் இல்லாததால், அந்த பணத்தை நீயே வச்சிரு, நான் அப்புறமா வாங்கிக்குறேன் என சொல்கிறார் செந்தில், அவரும் அதை பாக்கெட்டில் வைக்கிறார்.
55
தப்பிய செந்தில்
அந்த நேரம் பார்த்து அங்கு விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை செய்ய வருகிறார்கள். அப்போது உதவியாளர் பாக்கெட்டில் இருந்த பணத்தை பார்த்ததும், யாருக்கு கொடுக்க எடுத்துட்டு போன என கேட்க, அவர் மூத்த அதிகாரி ஒருவரை கைகாட்டி விடுகிறார். இதனால் செந்தில் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிக்கிறார். பின்னர் லஞ்சம் வாங்கிய இருவரை அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். அப்போது மீனா கேட்டது தான் செந்திலுக்கு நியாபகத்துக்கு வருகிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.