Siragadikka Aasai : கிரிஷுக்காக மனம்மாறிய ரோகிணி... ரேகா - சத்யா கல்யாணத்துக்கு நாள் குறித்த முத்து..!

Published : Jun 25, 2026, 08:47 AM IST

Siragadikka Aasai Serial 25 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவும், மீனாவும் சத்யாவின் கல்யாணத்திற்காக நாள் குறித்துள்ளனர். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தன்னுடைய மகன் கிரிஷ், ஸ்கூலில் பொய் சொல்லும் விஷயத்தை அறிந்ததும், அவனை அடித்து, ஏண்டா இப்படி பண்ற, யாரு உனக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுத்தா என கேட்க, அதற்கு கிரிஷ் நீ தான் என சொல்லிவிடுகிறார். உன்னைப் பார்த்து தான் நான் இதெல்லாம் கத்துக்கிட்டேன். மனோஜ் அங்கிள் வீட்டில் இருக்கும்போது நீ தான் பொய் சொல்ல கத்துக் கொடுத்த என கிரிஷ் சொன்னதைக் கேட்டு இடிந்துபோகிறார் ரோகிணி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Pandian Stores 2 : லஞ்சம் வாங்குறீங்களா? மீனா கேட்ட கேள்வியால் ஆடிப்போன செந்தில் - பணத்தால் வெடிக்கும் பிரச்சனை

25
மனம் மாறும் ரோகிணி

இதையடுத்து ரோகிணியை ரூமில் இருந்து வெளியே அழைத்து வரும் அவருடைய அம்மா, இதுவரைக்கும் உன் வாழ்க்கையை பத்தி மட்டும் நினைச்சியே, கிரிஷோட வாழ்க்கையை நினைச்சு பாத்தியா. இதுக்கு மேலேயாச்சும் உன் புள்ள வாழ்க்கையை நினைச்சு பாரு, அவனுக்காக வாழுற வழியப்பாரு என சொல்கிறார். பின்னர் வெளியே சென்று கதறி அழும் ரோகிணி, என் பையனுக்கு நானே துரோகம் பண்ணுற மாதிரி இருக்கு என ஃபீல் பண்ணுகிறார். இதையடுத்து இனி கிரிஷோட எதிர்காலம் தான் தனக்கு முக்கியம். தன்னுடைய வாழ்க்கைக்காக மத்தவங்களோட போராடுவதைவிட கிரிஷ் வாழ்க்கைக்கு எது முக்கியமோ அதை செய்வது தான் நல்லது என முடிவெடுக்கிறார்.

35
கல்யாணத்துக்கு தேதி குறித்த முத்து

மறுபுறம் முத்து, சந்தோஷமான விஷயம் சொல்ல வீட்டுக்கு வருகிறார். உள்ளே சென்றதும் மீனாவை அழைத்து, சத்யா - ரேகா கல்யாணத்துக்கு நாள் குறிச்சாச்சு என கூறுகிறார். அதைக்கேட்டதும் மீனா சந்தோஷப்படாமல் சோகமாக நிற்கிறார். அந்த சிந்தாமணியால் ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என யோசிக்கிறார் மீனா. அதற்கு முத்து, லவ் மேரேஜ்னாலே சிக்கல் தான். அதையெல்லாம் தாண்டி ஒன்னு சேர்ந்த இந்த ரவி - ஸ்ருதி எல்லாம் நல்லா தான இருக்காங்க. அவங்க கல்யணத்துக்கே நீ தான சாட்சி கையெழுத்து போட்ட என கூறுகிறார்.

45
சிந்தாமணியை அழைக்க முடிவெடுக்கும் அண்ணாமலை

அப்போது அங்கு வரும் அண்ணாமலையிடம் ரேகா - சத்யாவின் திருமணம் பற்றி கூறுகிறார் முத்து. அப்போது அவரிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, உடனே அண்ணாமலை, இந்த விஷயத்தை சிந்தாமணியிடமும் சொல்ல வேண்டும் என கூறுகிறார். பெத்தவங்களுக்கு தெரியாம திருமணம் பண்ணுவது தப்பு, அவங்களையும் அழைக்கணும் என கூறுகிறார். அதற்கு மீனாவும் சம்மதம் தெரிவிக்க, முத்துவும் - மீனாவும் ஜோடியாக சிந்தாமணி வீட்டுக்கு சென்று அவரை திருமணத்துக்கு அழைக்க சென்றிருக்கிறார்கள்.

55
சிந்தாமணியை அழைக்க செல்லும் முத்து - மீனா

அப்போது சிந்தாமணியையும், அவரது கணவரையும் சந்திக்கும் முத்து, சத்யா - ரேகாவுக்கு வருகிற புதன்கிழமை ரிஜிஸ்டர் ஆபிஸில் கல்யாணம் நடக்க இருப்பதாக சொல்கிறார். அதைக்கேட்டு கடுப்பான சிந்தாமணி, அவர்கள் கொண்டு வந்த தாம்பூல தட்டை தூக்கி எறிவதோடு, என்னை மீறி இந்த கல்யாணம் எப்படி நடக்கும்னு பாக்குறேன் என சவால்விடுகிறார். சிந்தாமணியின் கணவரும் எங்க பொண்ணை கல்யாணம் பண்ண உங்க தம்பிக்கு என்ன தகுதி தராதாரம் இருக்கு என கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

Read more Photos on
click me!

Recommended Stories