கிரீஷோட அம்மா இங்க தான் இருக்காங்க; அடிச்சு சொல்லும் மீனா... டர்ரான ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Aug 21, 2025, 12:21 PM IST

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷின் அம்மா யார் என்பதைப் பற்றிய உண்மையை மீனாவும் முத்துவும் கண்டுபிடிக்க முனைப்பு காட்டுவதால் ரோகிணி கலக்கம் அடைந்துள்ளார்.

PREV
14
Siragadikka aasai serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷின் பாட்டியிடம் பேசியது என்ன என்பதை வீட்டில் உள்ள அனைவரது முன்னிலையிலும் கூறுகிறார். கிரீஷின் பாட்டி நம்மிடம் பொய் சொல்லி இருக்கிறார். அவங்களா சொன்னாங்களா இல்லையென்றால் யாரேனும் சொல்ல வைத்தார்களா என்பது தெரியவில்லை. கிரீஷ் அவன் அம்மாகூட இருப்பதாக சொன்னாங்க. ஒன்னுமட்டும் புரியுது, அவங்க பொண்ணு வெளிநாட்டில் இருப்பதாக சொன்னதெல்லாம் பொய். அவங்க பொண்ணு இங்க தான் இருக்காங்க என சந்தேகப்படுகிறார் மீனா. உடனே நமக்கு தெரிந்த யாரோ தான் கிரீஷின் அம்மாவாக இருப்பார் என்று சொல்கிறார் ஸ்ருதி.

24
பயத்தில் ரோகிணி

உண்மையை மறைப்பது பலூனில் காற்றடிப்பது போல தான், ஒருநாள் அது வெடிக்கும் என கூறுகிறார் முத்து. இத்தனை நாளாக நாம தேடி அவங்க நம்மளுக்கு கிடைக்கல. ஆனால் இன்று அந்த அம்மா தானா வந்து உன் கண்ணில் சிக்கி இருக்கிறார். திரும்பவும் அந்த அம்மா நம்ம கண்ணுல மாட்டுவாங்க. அன்னைக்கு எப்படியாவது பேசி அவங்க மறைக்குற விஷயத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என சொல்கிறார் முத்து. இதை ஒளிந்திருந்து கேட்கும் ரோகிணி. இந்த விஷயத்தை முத்து - மீனா விடாமாட்டாங்க போல என நினைத்து மனதுக்குள் பயத்தோடு ரூமுக்குள் செல்கிறார்.

34
அடம்பிடிக்கும் கிரீஷ்

மறுபுறம் ரோகிணியை போனில் அழைக்கும் மகேஷ், போர்டிங் ஸ்கூலில் இருந்து போன் வந்ததைப் பற்றி சொல்கிறார். கிரீஷ் ஸ்கூலில் ரொம்பவும் அடம்பிடிப்பதாகவும், சாப்பிடாமல், டீச்சர் சொல்வதை கேட்காமல் இருப்பதையும் சொல்கிறார். அவனை யாராலும் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை என்றும் கூறுகிறார். இதைக்கேட்ட ரோகிணி, அவன் ஏன் இப்படி பண்றான்னே தெரியல. நானே இங்க நிறைய பிரச்சனைல இருக்கேன். நீ கொஞ்சம் கிரீஷ் கிட்ட பேசி சமாதானப்படுத்த முயற்சி பண்ணு என சொல்கிறார். பின்னர் கான்பரன்ஸ் காலில் கிரீஷ் உடன் பேசுகிறார் ரோகிணி.

44
கிரீஷை பிளாக்மெயில் பண்ணும் ரோகிணி

கிரீஷிடம் அடம்பிடிக்காமல் இருக்கும்படி கூறுகிறார் ரோகிணி. ஆனால் அவர் பேச்சைக் கேட்காத கிரீஷ், தனக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை என்றும், தன்னை இங்கிருந்து கூட்டிட்டு போங்க என அடம்பிடிக்கிறார். பின்னர் கோபமான ரோகிணி, நீ இப்படியே அடம்பிடித்தால், நானும் பாட்டி மாதிரி காணாமல் போயிடுவேன் என மிரட்டுகிறார் ரோகிணி. இதையடுத்து சொல்பேச்சை கேட்கும் கிரீஷ், நீ போகாத அம்மா, நான் டீச்சர் சொல்வதை கேட்டு நடக்கிறேன், சாப்பிடுகிறேன் என சொல்கிறார். மகனின் பிடிவாதத்தால் ஃபீல் பண்ணும் ரோகிணி என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார். இதன் பின் என்ன ஆனது என்பதை இனி வரும், எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories