பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 564ஆவது எபிசோடில் தங்கமயில் கர்ப்பம் இல்லை என்பது அறிந்து குடும்பத்தினர் அனைவரும் ஏற்கனவே அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் சரவணன் மட்டும் தங்கமயில் மட்டும் பொய் பொய்யாக சொல்லி தன்னை ஏமாற்றிவிட்டார் என்ற கோபத்திலும், ஆதங்கத்திலும் இருக்கிறார். இதன் காரணமாக மருத்துவமனையிலிருந்து அனைவரும் வீட்டிற்கு வந்த நிலையில் சரவணன் வீட்டிற்கே வரவில்லை. அனைவரும் அவரை காணவில்லை என்ற பதற்றத்தில் இருந்தனர்.
25
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடு
இந்த நிலையில் தான் இன்றைய 564ஆவது எபிசோடில் வீட்டிற்கு வந்த சரவணன் குடித்துவிட்டு வந்திருக்கிறாரா இல்லையா என்று செந்தில் அவரை செக் செய்து பார்த்தார். அதன் பிறகு தனது மாமா வீட்டிற்கு வந்ததைத் தொடர்ந்து அவரிடம் பேச வந்த தங்கமயிலிடம் சரவணன் முகம் கொடுத்து கூட பேசவில்லை.
இதைத் தொடர்ந்து வீட்டிற்குள் வந்த சரவணனிடம் உங்கள் மடியில் படுத்து அழ வேண்டும் போன்று இருந்தது. பாப்பா வரப் போகுது என்று சந்தோஷத்தில் இருந்த உங்களுக்கு இவ்வளவு பெரிய ஏமாற்றத்தை நான் கொடுத்துவிட்டேன் மாமா என்று தங்கமயில் அழுது புலம்பினார். உடனே நீ என்னை ஏமாற்றுவது என்ன புதுசா என்று கேள்வி கேட்க தொடங்கினார் சரவணன்.
35
பிரேக்கப்பில் முடிந்த சரவணன் அண்டு தங்கமயிலின் Husband and Wife Relationships!
எப்போது நான் உன்னை பார்த்தேனோ அப்போதிலிருந்து நீ என்னை ஏமாற்றி கொண்டு தான் இருக்க, உன்னை சொல்லி தப்பில்லை. உன்னுடைய உண்மையான முகம் தெரிந்து நான் உன்னை நம்புனது என்னுடைய தப்பு தான். ஆனாலும் இவ்வளவு கேவலமாக பொய் சொல்லுவ என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்றார். நீ படிப்பு விஷயத்தில் பொய் சொன்ன போது உன்னை உன்னுடைய வீட்டில் கொண்டு சென்று விட்டுவிட்டு வந்தேன். அதன் பிறகு நீ அமைதியாக இருந்திருந்தால் நானே உன்னை மனது மாறி கூப்பிட்டுக் கொண்டு வந்திருப்பேன். ஆனால், அதற்குள்ளாக இப்படியொரு நாடகமாடி வீட்டிற்குள் வந்து இவ்வளவு பெரிய பொய் சொல்லி எல்லோரையும் ஏமாற்ற்றிவிட்டாய்.
45
ஒரே ஒரு பொய், லைஃப் காலி – பிரேக்கப்பில் முடிந்த சரவணன் அண்டு தங்கமயிலின் Husband and Wife Relationships!
நீ பிரெக்னண்டாக இருக்கிறேன் என்ற பொய் சொல்லிருக்க தேவையில்லை. எப்படி வாய் கூசாமல் இவ்வளவு பெரிய பொய் சொல்லிருக்க அப்படி இப்படி என்று தன்னுடைய ஆதங்கத்தையும் ஏமாற்றத்தையும் மொத்தமாக தங்கமயில் மீது கோபமாக கொட்டிவிட்டார். பொய் மேல பொய்யா சொல்லி என்னுடைய தலையில் மிளகாய் அரைத்துவிட்டீர்கள். உங்களுடைய வீட்டையும், என்னுடைய வீட்டையும் ஒப்பிட்டு பேசாத. என்னுடைய வீட்டில் ஒரு மாசமாக இருப்பதாக சொன்ன போது எப்படி தாங்குனாங்க.
55
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
அவர்களை எப்படி ஏமாற்ற உனக்கு மனசு வந்தது. இனிமேல் நீ பேசவே கூடாது. ஸ்கேன் எடுக்க இன்னிக்கு போவோம், நாளைக்கு போவோம் என்று சொல்லி சொல்லி என்னை ஏமாற்றினது போதும். கடைசியில் நீ உன்னுடைய வீட்டிற்கு சென்றுவிடு. இல்லையென்றால் இந்த வீட்டில் எங்காவது ஒரு மூலையில் இரு. இனி உனக்கும் எனக்குமான உறவு அவ்வளவு தான் முறிந்துவிட்டது என்று கூறிவிட்டார்.