சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன் அறிவுக்கரசி போட்ட பிளானில் சிக்கி இருக்கிறார். அதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனிக்கும் ஆதி குணசேகரனுக்கும் இடையேயான இறுதி யுத்தம் தொடங்கி உள்ளது. நேற்றைய எபிசோடில் தர்ஷன் ஈஸ்வரியை பார்க்க ஆஸ்பத்திரிக்கு செல்வதை அறிவுக்கரசி, ஆதி குணசேகரன் ஆகியோர் தடுத்தனர். தன்னை மட்டும் போக விடவில்லை என்றால் கல்யாணத்தை நிறுத்திவிடுவேன் என்று பிளாக்மெயில் செய்ததோடு, தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மிரட்டினார். இதனால் வேறுவழியின்றி தர்ஷனை ஆஸ்பத்திரிக்கு செல்ல அனுமதித்தனர். பின்னர் ஒருவருக்கு போன் போட்டு, மருந்து ஒன்றை கொண்டு வர சொல்கிறார் அறிவு. அதன்பின் இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
வலையில் சிக்கிய தர்ஷன்
ஆஸ்பத்திரிக்கு சென்ற தர்ஷனை மீண்டும் வீட்டுக்கு வரச் சொல்கிறார் ஜனனி. அதுமட்டுமின்றி, உன்னுடைய கல்யாணத்தை வைத்து தான் இனி அடுத்தக்கட்ட நகர்வு இருக்கப்போவதாக கூறும் அவர், தாங்கள் சொல்லும் வரை அன்புக்கரசியிடம் நெருங்கிப் பழகுமாறு கூறுகிறார். இதற்கு ஓகே சொல்லும் தர்ஷன், இரவில் வீட்டிற்கு வருகிறார். அப்போது அன்பு மற்றும் அறிவு தூங்காமல் முழித்திருக்கிறார்கள். பின்னர் தான் வாங்கி வந்த மருந்தை ஒரு ஜூசில் கலந்து தர்ஷனிடம் கொடுக்குமாறு அன்புவிடம் கொடுத்து அனுப்புகிறார் அறிவு. தர்ஷனும் அந்த ஜூசை வாங்கி குடித்து விடுகிறார்.
34
ஜாமினில் வந்த ஞானசேகரன்
வசிய மருந்து கலந்த ஜூசை குடித்த தர்ஷனுக்கு உடலில் ஏதோ மாற்றம் தெரிகிறது. இதனால் சந்தோஷப்படும் அறிவு, இவனுங்களையெல்லாம் இப்படி தான் டீல் செய்ய வேண்டும், தர்ஷன் இனி உனக்கு தான் என அன்புவிடம் கூறுகிறார். மறுநாள் சிறையில் இருந்து ஞானசேகரன் ஜாமினில் வெளியே வருகிறார். இந்தத் தகவலை வக்கீல் சொன்னதும் செம குஷியாகிறார் ஆதி குணசேகரன். ஞானசேகரன் ஜாமினில் வந்தது அறிந்து ஜனனி மற்றும் சக்தி அதிர்ச்சி அடைகிறார்கள். அவரின் வருகையால் இனி நிகழப் போகும் குழப்பங்கள் என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தர்ஷனை வைத்து அறிவுக்கரசியை சிக்க வைக்க ஜனனி போட்ட பிளான் தற்போது சொதப்பி இருக்கிறது. மறுபுறம் தர்ஷன் - அன்புக்கரசி திருமணத்துக்கு சிக்கல் இருக்கிறது என சாமியாடி ஒருவர் சொன்னதால் குழப்பத்தில் இருக்கும் ஆதி குணசேகரனிடம், கேரளாவில் இருந்து மாந்திரீகர் ஒருவரை அழைத்து வந்து பூஜை செய்ய ஐடியா கொடுக்கிறார்கள். இதனால் என்ன நடக்கப் போகிறது? தர்ஷன் - அன்புக்கரசியின் திருமணத்தை ஆதி குணசேகரன் வெற்றிகரமாக நடத்துவாரா? ஜனனி போடப்போடும் அடுத்த பிளான் என்ன? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.