விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா தொடங்கி இருக்கும் ப்ரூட் பொக்கே பிசினஸிற்கு சிந்தாமணியால் புது சிக்கல் வந்துள்ளது. அது என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ராஜா - ராணியை பழிவாங்க தன்னுடைய நண்பன் கொடுத்த ஐடியாவைக் கேட்டு, ராணியின் வீட்டுக்கு செல்லும் மனோஜ், நான் உன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நீ பொய் சொன்னதை இப்போ நிஜமாக்க போறேன் என சொல்கிறார். கையில் பூவை கட்டிக் கொண்டு மனோஜ், ராணியை நெருங்க, அவர் கத்தி கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை வரவைக்கிறார். இதையடுத்து அங்கிருக்கும் பெண்கள் மனோஜை, அடி வெளுக்கிறார்கள். இந்த முறையும் ராணியை பழிவாங்கும் பிளான் சொதப்பியதால் வீட்டுக்கு திரும்புகிறார் மனோஜ். அதன் பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
மனோஜை திட்டும் ரோகிணி
துடப்பத்தால் அடிவாங்கிவிட்டு, உடலில் உள் காயங்களோடு வீட்டிற்கு வருகிறார் மனோஜ். அங்கு இருப்பவர்கள் என்ன ஆச்சு என கேட்கும்போது, உண்மையை சொன்னால் மாட்டிக் கொள்வோம் என்பதால், தான் யாரயோ போட்டி அடித்தது போல் பொய் சொல்கிறார் மனோஜ். வீட்டில் இருக்கும் முத்து, ரவி ஆகியோருக்கும் இவர் சொன்ன விளக்கம் நம்பும்படியாக இல்லை. ரோகிணிக்கும் டவுட்டு வர, அவர் மனோஜை ரூமுக்குள் அழைத்து சென்று, உண்மையில் என்ன நடந்தது என கேட்க, அதற்கு மனோஜும், தான் ராணியிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததால், துடப்பத்தால் அடிவாங்கியதை சொல்கிறார். இதனால் டென்ஷன் ஆகும் ரோகிணி, மனோஜை திட்டிவிடுகிறார்.
34
ஸ்ருதியின் ஆஃபரை ஏற்க மறுத்த மீனா
மறுபுறம் ரவி - ஸ்ருதி இருவருக்கும் இடையே ரெஸ்டாரண்ட் விஷயமாக பிரச்சனை சென்றுகொண்டிருக்கிறது. தான் தொடங்க உள்ள ரெஸ்டாரண்டுக்கு ரவி இருந்தால் நன்றாக இருக்கும் என ஸ்ருதி யோசிக்கிறார். ஆனால் ரவி அவருடன் செல்ல மறுப்பதால், மீனாவிடம் இதைப்பற்றி சொல்லி புலம்பும் ஸ்ருதிக்கு, தன் கையால் சூப் ஒன்றை போட்டுக் கொடுக்கிறார் மீனா. அந்த சூப்பை குடித்த ஸ்ருதி, இவ்வளவு டேஸ்டா இருக்கே, நீங்களே ஏன் என்னுடைய ரெஸ்டாரண்டுக்கு செஃப் ஆக வரக்கூடாது என அழைக்கிறார். ஆனால் அதற்கு மீனா மறுத்துவிடுகிறார். இதனால் வேறு செஃப் தேடும் வேலையில் இறங்குகிறார் ஸ்ருதி.
அதேபோல் மீனா தற்போது புதிதாக ஒரு பிசினஸ் செய்து வருகிறார். ப்ரூட் பொக்கே தயாரித்து விற்பனை செய்து வரும் மீனாவிடம், விஜயாவின் யோகா செண்டரில் இருந்து ஒரு ஆர்டர் வந்திருக்கிறது. அந்த ஆர்டரை ஏற்று ப்ரூட் பொக்கேகளை டெலிவரி செய்ய செல்கிறார் மீனா. அங்கு விஜயாவிடம் யோகா கற்க வந்த ஒருவர் தான் அந்த பொக்கேவை பார்வதியின் பிறந்தநாளுக்கு பரிசாக கொடுக்க ஆர்டர் செய்திருக்கிறார். அங்கு வந்த மீனா, அந்த பொக்கேவிற்கு 2500 ரூபாய் ஆனதாக சொல்கிறார். அங்கிருந்த சிந்தாமணியும், விஜயாவும் இதைப் பார்த்து வயித்தெரிச்சல் படுகிறார்கள். சிந்தாமணி, மீனாவின் இந்த புது பிசினஸிற்கு ஆப்பு வைக்க பிளான் போடுகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.